மத்திய பட்ஜெட் 2020:தமிழகத்துக்கு இவ்வளவு!உத்தரபிரதேசத்துக்கு அவ்வளவு!

Photo of author

By Parthipan K

மத்திய பட்ஜெட் 2020:தமிழகத்துக்கு இவ்வளவு!உத்தரபிரதேசத்துக்கு அவ்வளவு!

மத்திய பட்ஜெட்டில் தமிழகத்துக்கு வெறும் 10,000 ரூபாய் மட்டுமே ஒதுக்கி வஞ்சித்திருப்பதாக மக்களவை உறுப்பினர் சு வெங்கடேசன் குற்றம் சாட்டியுள்ளார்.

கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் தமிழக ரயில்வேத் துறைக்கு மிகவும் கம்மியான தொகையை ஒதுக்கி மத்திய அரசு வஞ்சித்துள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவை உறுப்பினர் சு வெங்கடேசன் கனடனம் தெரிவித்துள்ளார். இது சம்மந்தமாக அவர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

அவரது பேச்சில் ‘தமிழகத்திற்கு கடந்த ஆண்டுகளில் அறிவிக்கப்படட் ரயில்வே திட்டங்களுக்கான மதிப்பீட்டு தொகை மட்டுமே 10,000 கோடி ரூபாய். ஆனால் பட்ஜெட்டில் தமிழக ரயில்வேவுக்காக ஒதுக்கப் பட்டுள்ள தொகையோ வெறும் 10,000 ரூபாய். ஆனால் உத்தர பிரதேச ரயில்வேக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகை 7000 கோடி ரூபாய். இப்படி ஒரு செயலை செய்து தமிழகத்தை மத்திய அரசு வஞ்சித்து உள்ளது. இத்தனைக்கும் ஜி எஸ் டி வரி அதிகமாக அளிக்கும் மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. இந்த விவகாரத்தில் தமிழக அரசு உடனடியாக தலையிட வேண்டும்.’ எனத் தெரிவித்தார்.

திட்டமிடப்பட்டுள்ள தமிழக ரயில்வே திட்டங்கள் குறித்து தனது சமூகவலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

  • திண்டிவனம் – செஞ்சி – திருவண்ணாமலை: 70 கி.மீ: ரூ.900 கோடி
  • அத்திப்பட்டு-புத்தூர் (2008-09): 88 கி.மீ: ரூ. 1,150 கோடி
  • ஈரோடு-பழனி (2008-09): 91 கி.மீ : ரூ.1,140 கோடி
  • சென்னை–கடலூர்-மயிலாடுதுறை(2008-09): 179கி.மீ: ரூ. 2,300 கோடி
  • மதுரை-அருப்புக்கோட்டை-தூத்துக்குடி(2011-12): 143 கி.மீ: ரூ.1,800 கோடி
  • கூடுவாஞ்சேரி-ஸ்ரீபெரும்புதூர்-இருங்காட்டுக் கோட்டை-ஆவடி: 60கோடி (2013-14): 60 கிமீ: ரூ.1,500 கோடி
  • மொரப்பூர்-தர்மபுரி (2016-17): 36 கி.மீ: ரூ.360 கோடி
  • திண்டிவனம்-ஏஹிரி: (2006-07): 179கி.மீ: ரூ. 2,300 கோடி