ஆன்லைன் கல்வியை எதிர்க்கும் மத்திய அரசு – பள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல்

Photo of author

By Parthipan K

ஆன்லைன் கல்வியை எதிர்க்கும் மத்திய அரசு – பள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல்

Parthipan K

கொரோனா பொது முடக்கம் காரணமாக நடப்பு கல்வியாண்டில் பள்ளிகளை திறப்பது குறித்து மாநில அரசுகள் தீவிரமாக ஆலோசித்து வருகிறது.

இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் காணொளி காட்சி பங்கேற்ற மத்திய பள்ளி கல்வித்துறை செயலாளர் அனிதா கர்வால் பள்ளிகள் திறப்பது தொடர்பான மாநில அரசின் முடிவில் மத்திய அரசு தலையிடாது என தெரிவித்துள்ளார். ஆனால் பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு கருதி மேற்கொள்ள வேண்டிய தனிமனித இடைவெளி, வகுப்பறையில் மேற்கொள்ளபட வேண்டிய விதிமுறைகள் உள்ளிடவற்றை பற்றி மத்திய அரசு விதிமுறைகள் வகுத்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும் ஆன்லை வகுப்புகளை மத்திய அரசு ஊக்குவிக்காது என கூறியவர் ஓர் குறிப்பிட்ட சாதனத்தின் முன்பு சுமார் 8 மணி நேரம் பள்ளி குழந்தைகள் அமர்ந்தே இருந்தால் அவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும், இதற்கும் புதிய விதிமுறைகள் உருவாக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும் டிஜிட்டல் வகுப்பறைகளுக்கு என பிரத்யேகமாக புதிய சாதனங்களை உருவாக்கும் முயற்சியில் தகவல் தொழில்நுட்பத்துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.