டெல்லி: மத்திய ஆயுர்வேதத்துறை அமைச்சர் ஸ்ரீபத் நாயக்கர்க்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. லேசான அறிகுறியுடன் தொற்று உறுதியானதையடுத்து அவர் அவரது வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கடந்த சில நாட்களில் அவருடன் தொடர்பில் இருந்தவர்களை பரிசோதித்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார்.