டிகிரி முடித்தவர்களுக்கு சிஐபிஇடியில் அசத்தல் வேலை.. மாதம் ரூ.40000 சம்பளம்!!

0
35
#image_title

டிகிரி முடித்தவர்களுக்கு சிஐபிஇடியில் அசத்தல் வேலை.. மாதம் ரூ.40000 சம்பளம்!!

மத்திய அரசின் கெமிக்கல் மற்றும் உரத்துறையின் கட்டுப்பாட்டில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் தன்னாச்சியுடன் செயல்பட்டு வரும் ‘மத்திய பெட்ரோல் கெமிக்கல் என்ஜினியரிங் & டெக்னாலஜி’ நிறுவனம் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.அதில் விரிவுரையாளர்,அக்கவுண்டிங்,உதவி பேராசியர் உள்ளிட்ட பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று சொல்லப்பட்டுள்ளது.

நிறுவனம்: மத்திய பெட்ரோல் கெமிக்கல் என்ஜினியரிங் & டெக்னாலஜி

காலிப்பணியிடங்கள்: மொத்தம் 14

விரிவுரையாளர் பணி: மெக்கானிக்கல் என்ஜினியரிங், பிளாஸ்டிக் டெக்னாலஜி உள்ளிட்ட பிரிவுக்கு 2 நபர்கள் தேவை படுகின்றனர்.

விரிவுரையாளர் பணி: கம்ப்யூட்டர் சயின்ஸ்ட்,கணிதம்,வேதியியல்,இயற்பியல்,ஆங்கிலம், மேனேஜ்மென்ட் அன்ட் பைனான்சில் அக்கவுண்டிங் உள்ளிட்ட பிரிவுக்கு தலா ஒருவர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

கல்வி தகுதி: மெக்கானிக்கல் என்ஜினியரிங்,பிளாஸ்டிக் டெக்னாலஜி,கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவுகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் குறிப்பிட்ட துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.கணிதம், இயற்பியல், தேவியியல், மேனேஜ்மென்ட் என்ட் பைனான்சியல் அக்கவுண்ட்டிங் உள்ளிட்ட பிரிவுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் குறிப்பிட்ட துறையில் மாஸ்டர் டிகிரி பெற்றிருக்க வேண்டும்.

மாத ஊதியம்: ரூ.30000/- முதல் ரூ.35000/- வரை வழங்கப்படும்.

உதவி பேராசியர்: பிளாஸ்டிக் டெக்னாலஜி,மெக்கானிக்கல் என்ஜினியரிங்,கணிதம், அசிஸ்டென்ட் பிளேஸ்மென்ட் கன்சல்டன்ட் உள்ளிட்ட பிரிவுக்கு தலா ஒருவர் ஒருவர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

கல்வி தகுதி: பிஇ,பிடெக்,எம்இ,எம்டெக் டிகிரி பெற்றிருக்க வேண்டும்.இல்லாவிட்டால் பிஎச்டி படிப்பை முடித்து 2 ஆண்டு பணி அனுபம் கொண்டிருக்க வேண்டும்.
உதவி பேராசிரியர் (கணிதம்) பிரிவுக்கு கணிதத்தில் மாஸ்டர் டிகிரி பெற்றிருக்க வேண்டும். இல்லாவிட்டால் கணிதத்தில் பிஎச்டி படிப்பை முடித்து 2 ஆண்டு பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

மாத ஊதியம்: ரூ.35000/- முதல் ரூ.40000/- வரை வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: தபால் முறை

இப்பணிகளுக்கு தகுதி மற்றும் விருப்பம் இருக்கும் விண்ணப்பதாரர்கள்  www.cipet.gov.in  இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அவற்றை பூர்த்தியிட்டு முறையான சான்றிதழ்களுடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

முகவரி:

எந்த பிரிவுக்கு பணி செய்ய விரும்புகிறீர்க்ளோ அதை விண்ணப்பத்தின் மேல்புறம் ‛போல்ட்’ ஆக எழுதி Director & Head, CIPET-jaipur, SP-1298, Sitapura Industrial Area, Phase-III, Tonk Road, Jaipur – 302 022 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

கடைசி தேதி: இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 22-09-2023 ஆகும்.

பணி மற்றும் விண்ணப்பிப்பதில் சந்தேகம் இருந்தால் விண்ணப்பதாரர்கள் [email protected]  என்ற மிஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளலாம்.