வரும் ஆகஸ்ட் 24-ஆம் தேதி (நாளை) மத்திய குழுவினர், டெல்டா மாவட்டங்களில் அறுவடை செய்யும் நெல்லின் ஈரப்பதம் குறித்து ஆய்வு நடத்த வர உள்ளதாக தமிழ்நாடு நுகர்பொருள் வணிபக் கழக நிர்வாக இயக்குனரான சுதாதேவி தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி முதல் 21-ஆம் தேதி வரை 2.65 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இது கடந்த 2003-ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு நுகர்பொருள் கழகத்தின் மூலம் நேரடி கொள்முதல் நிலையத்தில் இருந்து நெல்லை கொள்முதல் செய்யும் மத்திய அரசின் முகவராக செயல்பட்டு வரும் நிலையைவிட அதிகமான ஒன்றாக அமைந்துள்ளது.
டெல்டா பகுதியான திருவள்ளூர் , நாகை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் சுமார் 841 நேரடி கொள்முதல் நிலையங்கள் செயலில் உள்ளது. ஆனால் விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை ஈரப்பதத்தை காரணமாக கொண்டு அதனை வாங்க மறுப்பதாக வந்த புகார் இல்லை எதிர்த்து, நெல்லை கொள்முதல் ஊழியர்கள் வாங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதனால் டெல்டா மாவட்டங்களில் நாளொன்றுக்கு 20 ஆயிரத்திற்கும் அதிகமான நெல் கொள்முதல் செய்யப்படுகிறது .அதில் 11,000 நெல் அரவைக்காக ஆலைகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றது. மீதமுள்ள நெல் மூட்டைகள் ஒரு வாரத்திற்குள் குறைந்துவிடும்.
அதிக அளவில் நெல் மூட்டைகள் வருவதினால் ,அதற்கான முறைகேடுகளும் அதிகளவில் இருப்பதனால் மத்திய அரசு நேரடி கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது. மேலும் டெல்டா மாவட்டங்களில் நுகர்பொருள் வாணிப ஏஜென்சி அதிகாரிகள் தலைமையிலான குழுவினர் தினமும் 60 நேரடி கொள்முதல் நிலையங்களுக்கு சென்று ஆய்வு நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.
மேலும் டெல்டா பகுதிகள் இன்றி மற்ற மாவட்டங்களில் அறுவடை செய்யும் பயிர்களை , மண்டல மேலாளர் தலைமையில் 6 பேர் கொண்ட குழு ஆய்வு செய்து வரவேண்டும் என்றும் கூறியுள்ளனர்.
மேலும் நெல்லின் ஈரப்பதத்தில் 17 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்று மத்திய அரசிடம் விவசாயிகள் தரப்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆய்வு நடத்த வரும் 24-ஆம் தேதி டெல்டா மாவட்டங்களுக்கு வருவதாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அதிகாரி தெரிவித்துள்ளார்.
நெல்லின் ஈரப்பதத்தை உயர்த்தி வழங்க வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். சாகுபடி முடிந்து அடுத்த நடவான சம்பா சாகுபடி, டெல்டா மாவட்டங்களில் சுமார் 40 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், தோட்டக்கலை மற்றும் மலை பயிர் துறை இயக்குனருமான என்.சுப்பையன் ,மாவட்ட ஆட்சியர் கோவிந்தராஜ் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் அரவிந்தன் உள்ளிட்டோர் அதிகாரி இதில் கலந்துக்கொண்டனர்.