மனைவியை விவாகரத்து செய்கிறேனா?… பதறியடித்து பதிலளித்த இந்திய கிரிக்கெட் வீரர்

Photo of author

By Vinoth

மனைவியை விவாகரத்து செய்கிறேனா?… பதறியடித்து பதிலளித்த இந்திய கிரிக்கெட் வீரர்

Vinoth

Updated on:

மனைவியை விவாகரத்து செய்கிறேனா?… பதறியடித்து பதிலளித்த இந்திய கிரிக்கெட் வீரர்

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் சுழல்பந்து வீச்சாளர் சாஹல் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்துகொண்டார்.

சமீபகாலமாக இந்திய அணியில் இடம் கிடைக்காமல் அவதிப்பட்டு வந்த சாஹல், தற்போது மீண்டும் தன்னுடைய இடத்தை உறுதி செய்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக சாஹல் சமூகவலைதளங்களில் சர்ச்சை ஒன்றில் சிக்கியுள்ளார்.

யுஸ்வேந்திர சாஹல் தனது மனைவி தனஸ்ரீ வர்மாவை விவாகரத்து செய்ய உள்ளதாக தகவல்கள் பரவின. இதற்குக் காரணம் சமீபத்தில் தனுஸ்ரீ தன்னுடைய சமூகவலைதளப் பக்கங்களில் தன்னுடைய கணவர் பெயரான சாஹலை நீக்கினார். இதுதான் ரசிகர்களுக்கு விவாகரத்து யூகங்களுக்கு வழிவகுத்தது.

இந்நிலையில் “விவாகரத்து” தொடர்பான பதிவுகளால் சமூக ஊடகங்களில் பரபரப்பானதைத் தொடர்ந்து, தனது திருமண வாழ்க்கை குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் என்று தனது ரசிகர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதைப்பற்றி தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் சாஹல், “எங்கள் உறவு தொடர்பான எந்த விதமான வதந்திகளையும் நம்ப வேண்டாம் என்று உங்கள் அனைவருக்கும் பணிவான வேண்டுகோள். தயவுசெய்து, அதற்கு முற்றுப்புள்ளி வைக்கவும். அனைவருக்கும் அன்பு.” எனக் கூறி பதிலளித்துள்ளார்.