6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு!

Photo of author

By Sakthi

அந்தமான் கடற்பகுதியில் கடந்த 13ஆம் தேதி ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலுவடைந்து நேற்றுமுன்தினம் 1:30 மணி அளவில் சென்னைக்கும், புதுச்சேரிக்கும், இடையே கரையை கடக்க ஆரம்பித்தது தாழ்வு மண்டலத்தின் முக்கியப் பகுதி அதிகாலை 3 மணி முதல் 4 மணி வரை நடந்தது எனவும், முழு பகுதியும் அதிகாலை 5 மணி அளவில் கரையை கடந்து விட்டது எனவும், வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

கரையை கடந்தது தாழ்வு மண்டலம் தாழ்வுப் பகுதியாக வலு குறைந்து, தெற்கு ஆந்திர மற்றும் தமிழக பகுதிகளில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி  நீடித்து வருகின்றது. இதனால் தமிழ்நாட்டில் இன்று முதல் 21-ஆம் தேதி வரை ஒரு சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

அதனடிப்படையில், ஈரோடு, நீலகிரி, கிருஷ்ணகிரி, அரியலூர், பெரம்பலூர், சேலம், உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை மற்ற மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் அனேக பகுதிகளில் மிதமான மழையும், என்னுடைய தினம் பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது.

நாளைய தினம் பெரம்பலூர், அரியலூர், கள்ளகுறிச்சி, டெல்டா மாவட்டங்கள் கடலூர் மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை மற்ற மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் அனேக பகுதிகளில் மிதமான மழையும் பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது.

நாளை மறுதினம் அதாவது 23ம் தேதியும், தென்மாவட்டங்கள் உள் மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் கனமழை பெய்யும் மற்ற மாவட்டங்கள் புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் அநேக பகுதிகளில் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது.

சென்னையை பொறுத்தவரையில் இன்று வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும், நகரத்தின் ஓரிரு பகுதிகளில் லேசான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

நேற்று முன்தினம் காலை 8.30மணி முதல் நேற்று காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் ஐந்து பகுதிகளில் அதிக மழையும், 37 பகுதிகளில் மிக கனமழை பெய்யும் 66 பகுதிகளில் கனமழை பெய்து உள்ளது.

இதில் அதிகபட்சமாக கோலியனூர், திண்டிவனம், வல்லம், வளவனூர், உள்ளிட்ட பகுதிகளில் 22 சென்டி மீட்டர் மழை பதிவாகி இருக்கிறது. அதேபோல மணம்பூண்டி பகுதியில் 21 சென்டி மீட்டர் மழை பதிவாகி இருக்கிறது. அதேபோல முகையூர் 20 சென்டிமீட்டர் புதுச்சேரி, ஆனந்தபுரம், வேங்கூர், உள்ளிட்ட பகுதிகளில் தலா 19 சென்டிமீட்டர் விழுப்புரம், திருக்கோவிலூர், செஞ்சி, மரக்காணம், உள்ளிட்ட பகுதிகளில் தலா 18 சென்டி மீட்டர் மழையும், வானூர் பகுதியில் 16 சென்டி மீட்டர் மழையும், திருவண்ணாமலை பகுதியில் 15 சென்டி மீட்டர் மழையும், உத்திரமேரூர், தண்டராம்பட்டு, கடலூர், ஊத்தங்கரை, வேம்பாக்கம், உள்ளிட்ட பகுதிகளில் தலா 14 சென்டிமீட்டர் உட்பட அநேக பகுதிகளில் மழை பெய்து உள்ளது.

இதன் தொடர்ச்சியாக எதிர்வரும் வாரம் தமிழ்நாட்டில் இயல்பை விட சற்று அதிகமாக மழை பதிவாகியிருக்கிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. அதற்கான காரணம் தொடர்பாக ஆய்வு மைய அதிகாரிகள் இடம் கேள்வி எழுப்பியபோது, கிழக்கு வங்க கடல் பகுதியில் ஒரு மேலடுக்கு சுழற்சி ஏற்படுகிறது எனவும், இதன் காரணமாக, 26 மற்றும் 27 உள்ளிட்ட தேதிகளில் தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது எனவும் தெரிவித்து இருக்கிறார்கள்.