தென் மாவட்டங்களில் மீண்டும் தலைதூக்கும் போஸ்டர் யுத்தம்!

0
150

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் ஐயனே படையில் திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பகுதியிலிருந்து ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் அதிக எண்ணிக்கையில் இடம்பெறவில்லை என்று அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி விமர்சனம் செய்திருக்கிறார்.

அவருடைய விமர்சனத்திற்கு குறிப்பிட்ட சமூகத்தினரிடம் இருந்து கடுமையான எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. வன்மையாக கண்டிக்கின்றோம் என்ற தலைப்பில் நேதாஜி இளைஞர் சங்கம் சார்பாக தென்மாவட்டங்களில் கண்டன சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. அதில் சமூகத்தையும் ஜாதி ரீதியிலான பிரச்சனைகளை ஏற்படுத்திவரும் அரசியல் புரோக்கர் ரவீந்திரன் துரைசாமியை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய், என்ற வாசகங்கள் இடம்பெற்றிருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்த சுவரொட்டிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில், பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சார்ந்த ஒரு சில ஜாதிகளில் அமைப்புகளும் ரவீந்திரன் துரைசாமிக்கு கூட்டாக ஆதரவு தெரிவிக்கும் சுவரொட்டிகளை ஒட்டி இருக்கிறார்கள். இதனால் தென்மாவட்டங்களில் சுவரொட்டி யுத்தம் தலைதூக்கி இருக்கிறது.

Previous article6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு!
Next articleஅன்பு பரிசளித்த மகன் ஆர்வமில்லாத முதலமைச்சர்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here