தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சி, கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், நீலகிரி, கோவை மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மன்னார் வளைகுடா பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்தில் உள்ள 15 மாவட்டங்களில் இன்று மழைக்கான வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
மேலும் தெற்கு ஆந்திரா மற்றும் கர்நாடகா பகுதிகளிலும் வளிமண்டல கீழடுக்க சுழற்சி நிலவுவதாக அறிவிப்பு வெளியாகி இருந்த நிலையில், பெங்களூருவில் மழை வெள்ளத்தால் பெரிதளவு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் தமிழகத்தில் நவம்பர் 7ஆம் தேதி வரையில் பல்வேறு இடங்களில் கன மழை மற்றும் மிக கனமழை காண வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இங்கு மட்டுமின்றி, பெங்களூரு நகரிலும் இன்னும் மூன்று நாட்களுக்கு மழை தொடரும்’ என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.