தமிழ்நாடு புதுச்சேரி பகுதிகளில் ஏப்ரல் 30 முதல் மே 3 வரை கனமழைக்கு வாய்ப்பு!!

0
212
#image_title

தென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக,

29.04.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

30.04.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

01.05.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 கிலோமீட்டர் முதல் 50 கிலோமீட்டர் வரை) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

திருப்பத்தூர், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம் மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, விருதுநகர், ஈரோடு, நாமக்கல், கரூர் மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

02.05.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 கிலோமீட்டர் முதல் 50 கிலோமீட்டர் வரை) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, விருதுநகர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

03.05.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 கிலோமீட்டர் முதல் 50 கிலோமீட்டர் வரை) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தேனி, திருப்பத்தூர், சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):
கொடநாடு (நீலகிரி) 8, குழித்துறை (கன்னியாகுமரி) 6, கொடைக்கானல் (திண்டுக்கல்), கோவிலங்குளம் (விருதுநகர்), அருப்புக்கோட்டை AWS (விருதுநகர்) தலா 5, கோழிப்போர்விளை (கன்னியாகுமரி) 4, வெம்பக்கோட்டை (விருதுநகர்), கொடைக்கானல் படகு குழாம் (திண்டுக்கல்), கோத்தகிரி எஸ்டேட் (நீலகிரி) தலா 3, சேந்தமங்கலம் (நாமக்கல்), பேராவூரணி (தஞ்சாவூர்), பெரியார் (தேனி), கழுகுமலை (தூத்துக்குடி), கடலாடி (ராமநாதபுரம்), வேடநத்தம் (தூத்துக்குடி), தக்கலை (கன்னியாகுமரி), விருதுநகர், பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி) தலா 2, திருச்சிராப்பள்ளி விமான நிலையம், புத்தன் அணை (கன்னியாகுமரி), மதுரை விமான நிலையம், கோவில்பட்டி (தூத்துக்குடி), அருப்புக்கோட்டை (விருதுநகர்), சிவகாசி (விருதுநகர்), சத்தியார் (மதுரை), விருதுநகர் AWS (விருதுநகர்), குன்னூர் (நீலகிரி), வாலிநோக்கம் (ராமநாதபுரம்) தலா 1.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:
29.04.2023 மற்றும் 30.04.2023: தென் தமிழக கடலோரப்பகுதிகள், இலங்கை கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் `சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகள், கர்நாடக-கேரள கடலோர பகுதிகள், லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு கடலோர பகுதிகளில் `சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Previous articleபேனா நினைவுச் சின்னம் அமைக்க அனுமதி: போராட்டத்தை அறிவித்த சீமான்!
Next article“கலைஞர் டிவியில் எனக்கு பங்கு இல்லை”  அண்ணாமலைக்கு  கனிமொழி எம்பி நோட்டீஸ்!