இன்று முதல் 5ம் தேதி வரையில் மழை பெய்ய வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்

Photo of author

By Sakthi

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து இருப்பதால் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது. மண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலம் உள்ளிட்டவை காரணமாக, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கன்னியாகுமரி, சென்னை, திருநெல்வேலி, உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்தது. அத்துடன் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் ஒரு சில இடங்களில் கனமழையின் காரணமாக, தேங்கி நின்ற மழைநீர் இதுவரையிலும் வடியவில்லை.

அதற்குள் அடுத்தடுத்து மழை பெய்ததால் பொதுமக்களிடையே இயல்பு வாழ்க்கை பாதிப்புக்கு உள்ளானது, சென்னையை பொறுத்தவரையில் நேற்று காலையில் இருந்தே வெயில் அடித்து வந்தது தமிழ்நாட்டில் இன்று முதல் 5ஆம் தேதி வரையில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அந்தமான் கடல் பகுதியில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறினாலும் தமிழ்நாட்டிற்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லை என்று ஏற்கனவே கூறப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புதிய அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, இரண்டாம் தேதி அதாவது இன்றைய தினம் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி இருக்கக் கூடிய மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழையும், மற்ற மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால், உள்ளிட்ட இடங்களில் ஓரிரு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. நாளைய தினம் தென்மாவட்டங்கள் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி இருக்கக் கூடிய மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டி உள்ள உள் மாவட்டங்களில் ஒரு பகுதிகளில் மிதமான மழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் ஆகிய இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் செய்வதற்கான வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

அதேபோல எதிர்வரும் நான்கு மற்றும் ஐந்து உள்ளிட்ட தேதிகளில் தென்மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டி இருக்கக்கூடிய உள் மாவட்டங்களில் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளிலும் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. சென்னையை பொருத்தவரையில் இன்று நகரின் ஒரு பகுதியில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

அந்தமான் கடல் பகுதியில் தற்சமயம் நிலவிவரும் காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலம் அதனை அடுத்த 24 மணி நேரத்தில் பெயராகும் வலுப்பெற்று மத்திய வங்கக் கடல் பகுதிக்கு நகர்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. இது மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து சற்று வலுப்பெற்று வட ஆந்திரா, தெற்கு ஒடிசா உள்ளிட்ட பகுதிகளில் வருகின்ற நான்காம் தேதி காலை நெருங்குவதற்கான வாய்ப்பு இருக்கிறது.

இதனால் இரண்டாம் தேதி தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டி இருக்கக்கூடிய மத்திய கிழக்கு வங்க கடல் அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும், பேசுவதற்கான வாய்ப்பு உள்ளது. 3ம் தேதி அதாவது நாளை மத்திய வங்கக் கடல் பகுதியில் புயல் காற்று மணிக்கு 65 கிலோ மீட்டர் முதல் 75 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 85 கிலோ மீட்டர் வேகத்தில் வீசுவதற்கான வாய்ப்பு உள்ளது. ஆந்திரா மற்றும் ஒடிசா கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசுவதற்கான வாய்ப்பிருக்கிறது.

எதிர்வரும் 4ஆம் தேதி வட மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் புயல்காற்று 90 கிலோ மீட்டர் முதல் 100 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 110 கிலோ மீட்டர் வேகத்தில் வீசுவதற்கான வாய்ப்பிருக்கிறது வடக்கு ஆந்திரா ஒடிசா கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 70 கிலோ மீட்டர் முதல் 80 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 90 கிலோ மீட்டர் வேகத்தில் வீசுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் புயல் காற்று மணிக்கு 60 கிலோ மீட்டர் முதல் 70 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 80 கிலோ மீட்டர் வேகத்தில் வீசுவதற்கான வாய்ப்பு உள்ளது. ஆகவே அந்தமான் கடல் பகுதி மற்றும் தென்கிழக்கு வங்க கடல் மத்திய வங்கக் கடல் வடமேற்கு மற்றும் மத்திய வங்க கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று 8:30 உடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் அதிகபட்சமாக வந்தவாசியில் 9 சென்டி மீட்டர் மழை பதிவாகி இருக்கிறது. இதற்கு அடுத்தபடியாக சோழிங்கநல்லூரில் 7 சென்டிமீட்டர் மற்றும் திருவண்ணாமலை, வீரபாண்டி, காட்பாடி, ஆர்கே பேட்டை, ஆவடி, உள்ளிட்ட பகுதிகளில் தலா 5 சென்டி மீட்டர் மழையும், பதிவாகி இருக்கிறது சிவகாசி, அம்முண்டி, கொடைக்கானல், பவானி, உள்ளிட்ட பகுதிகளில் தலா 4 சென்டி மீட்டர் மழையும், சேரன்மகாதேவி, சாத்தூர், உசிலம்பட்டி, ஸ்ரீபெரும்புதூர், குன்னூர், பெரியகுளம், காவேரிப்பாக்கம்,பொண்ணை அணை, அவலாஞ்சி, செங்கம், உள்ளிட்ட பகுதிகளில் தலா 3 சென்டி மீட்டர் மழையும், பதிவாகி இருக்கிறது.