அதிமுக கட்சி விதிகளில் புதிய திருத்தம்! சசிகலாவுக்கு வைத்த தலைமை!

0
78

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அதிமுகவின் செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது இந்த கூட்டத்தில் அதிமுகவில் ஒற்றை தலைமை என்ற பேச்சுக்கு இடமில்லை இரட்டை தலைமைதான் என்பதை நிரூபிக்கும் விதத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது
.

அந்த சிறப்பு தீர்மானத்தில் இடம் பெற்றிருக்க கூடிய அம்சங்கள் வருமாறு அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா அதிமுக எனக்குப் பின்னாலும் நூறு வருடங்களுக்கு நீடித்து நிலைத்து இருக்கும் என்று சூளுரைத்து இருந்தார். அவர் வகித்த பொதுச் செயலாளர் பொறுப்பு அவருக்கு மட்டுமே உரியது என்று அதிமுகவின் அனைத்து அடிப்படை உறுப்பினர்களும், மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு இருக்கிறோம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அவருடைய மறைவுக்குப் பிறகு அதிமுகவை வழி நடத்துவதற்கு கடந்த 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 12ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு ஏற்படுத்தப்பட்டு பொதுச் செயலாளருக்கு அளிக்கப்பட்டிருக்கும் அனைத்து பொறுப்புகளும், அதிகாரங்களும், வழங்கி ஒப்புதல் வழங்கப்பட்டது. அதோடு அதிமுக சட்ட திட்ட விதிகளை திருத்தம் செய்வதற்கு கட்சி பொதுக் குழு உறுப்பினர்களால் ஏகமனதாக ஒப்புதல் வழங்கப்பட்டது. அதனடிப்படையில் அதிமுகவில் சட்ட விதிகளில் தேவையான திருத்தங்கள் செய்யப்பட்டன அதில் விதி 20.40 உள்ளிட்டவை திருத்தம் செய்யப்பட்டது.

இதுகுறித்து அதிமுக அடிப்படை உறுப்பினர்களின் கோரிக்கை உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து கட்சியின் செயற்குழுவின் அனைத்து உறுப்பினர்கள் உடைய கருத்துகளை கேட்டறிந்த பிறகு அதிமுக சட்டதிட்ட விதிமுறைகளில் பின்வரும் திருத்தங்கள் செய்வதற்கு முன் வரையப்பட்டு உள்ளது என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அதன் விபரங்கள் வருமாறு, தற்போது அமலில் இருக்கின்ற சட்டதிட்ட விதிமுறைகளின்படி அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணைப்பாளர் உள்ளிட்டோர் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். திருத்தங்கள் செய்ய முன்மொழியப்படும் சட்டதிட்ட விதிமுறைகளின்படி இனி அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணைப்பாளர் கட்சியின் அடிப்படை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப் படுவார்கள். இவர்கள் இருவரும் கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் ஒற்றை வாக்கின் மூலமாக இணைந்தே தேர்வு செய்யப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது.

அதிமுகவின் சட்ட விதிகளை இயற்றவும், திருத்தவும், நீக்கம் செய்யவும், பொதுக்குழு அதிகாரம் படைத்தது என்று சொல்லப்படுகிறது. ஆனால் இந்த சட்ட திட்டங்களின் அடிப்படை உணர்வாக ஏற்படுத்தப்பட்டுள்ள அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், உள்ளிட்டோரை கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் மட்டுமே தேர்ந்தெடுக்க முடியும் என்ற விதியை மட்டும் மாற்றுவதற்கு உரியதல்ல என அந்த விதிமுறையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிமுக சட்ட திட்ட விதிகளில் எந்த விதியையும் தளர்த்துவதற்கும், விதிவிலக்கு அளிப்பதற்கும், அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்டோருக்கு முழுமையான அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் இந்த சட்ட திட்டங்களின் அடிப்படை உணர்வாக ஏற்படுத்தப்பட்டு இருக்கின்ற அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்டோரை கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் மட்டுமே தேர்ந்தெடுக்க முடியும் என்ற விதியை மட்டும் விலக்கு அளிப்பதற்கோ, தளர்த்துவதற்க்கோ , அதிகாரம் இல்லை என கூறப்பட்டுள்ளது.

இந்த திருத்தங்கள் உடனடியாக அமலுக்கு வருகிறது, அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இந்த திருத்தங்களுக்கு ஒப்புதல் ஆக வேண்டும் என்று இந்த செயற்குழுவில் தீர்மானம் செய்யப்படுகிறது. இவ்வாறு சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

சசிகலா மறுபடியும் அதிமுக தலைமை பொறுப்புக்கு வந்து விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு அதிமுக செயற்குழு கூட்டத்தில் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டு வருவதாக அரசியல் வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது. அதிமுக உட்கட்சி தேர்தலில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணைப்பாளர் பதவிக்கு யார் வேண்டுமென்றாலும் போட்டியிடலாம். அதிக வாக்குகள் பெறுவோர் ஒருங்கிணைப்பாளராகவும். இரண்டாவது இடத்தில் இருப்போர் இணை ஒருங்கிணைப்பாளராகவும், தேர்வு செய்யப்படுவார்கள். இவ்வாறு தேர்வு செய்யப்படுபவர்கள் 5ஆண்டுக் காலம் பதவியில் இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.