இன்று மழை பெய்ய விருக்கும் தமிழக தென் மாவட்டங்கள்!

0
145

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கின்ற செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, தென் தமிழகம் மற்றும் இலங்கை ஒட்டி நடைபெறும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தென் மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கின்றது. மற்ற மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்று கூறப்பட்டுள்ளது.

நாளைய தினம் புதுக்கோட்டை, இராமநாதபுரம், கடலூர், புதுச்சேரி, காரைக்கால், உள்ளிட்ட பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை டெல்டா மாவட்டங்களான திருவாரூர், தஞ்சை, நாகை, உள்ளிட்ட மாவட்டங்களிலும் ஓரிரு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி இருக்கக் கூடிய மாவட்டங்கள் மற்றும் அதனை சுற்றி இருக்கக் கூடிய உள் மாவட்டங்களிலும், ஓரிரு பகுதிகளில் லேசான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொருத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் இருக்கும், நகரத்தின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleதிருச்சி சுற்று வட்டார பகுதியில் பெய்த கன மழை! வெள்ளத்தில் மிதக்கும் மணப்பாறை!
Next articleபிப்ரவரி மாதத்தில் வரவிருக்கும்நோய்த்தொறு மூன்றாவது அலை!