தமிழகத்தில் தொடர்ந்து இரு நாட்களுக்கு அதிக மழைக்கு வாய்ப்பு :! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை !!

Photo of author

By Parthipan K

ஆந்திரா மற்றும் ஒடிசா கடலோர பகுதிகளில் கடந்த சில நாட்களாக நிலவி வரும் வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தருமபுரி ,சேலம் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக ஆய்வு மையம் கூறியுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று கூறியுள்ளது.

அந்தமான் கடல் பகுதிகளில் வரும் அக்டோபர் 3-ஆம் தேதி சூறாவளி காற்று 45 முதல் 65 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்றும், அக்டோபர் 3-ஆம் தேதி முதல் 5 வரை வட மேற்கு வங்க கடலில் சூறாவளி காற்று 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் ஒடிசாவை நோக்கி வீசக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.இதனால் மீனவர்கள் அப்பகுதிக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.