தமிழகத்தில் மீண்டும் மழைக்கு வாய்ப்பு! சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்!

0
240
Chance of rain again in Tamil Nadu! Information released by Chennai Meteorological Department!
Chance of rain again in Tamil Nadu! Information released by Chennai Meteorological Department!

தமிழகத்தில் மீண்டும் மழைக்கு வாய்ப்பு! சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்!

கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் வங்கக்கடலில் தென்கிழக்கு பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த இரண்டு நாட்களில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலைகொண்டது.மேலும் அவை புயலாக வலுப்பெற்றது.அந்த புயலிற்கு மாண்டஸ் என்று பெயர் வைக்கப்பட்டது.

அந்த மாண்டஸ் புயலின் காரணமாக தமிழகம், புதுச்சேரி,காரைக்கால் ஆகிய இடங்களில் கனமழை பெய்தது அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டனர்.கடந்த வாரங்களில் தான் மழையின் தாக்கம் குறைந்த நிலையில் பள்ளிகள் அனைத்தும் மீண்டும் செயல்பட தொடங்கி உள்ளது.

இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு என அறிவித்துள்ளது.தமிழக கடலோர மாவட்டங்கள், அதை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி,காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்புள்ளது.

மேலும் சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளனர்.

Previous articleகாளைகள் முட்டி பலியான வீரர்களுக்கு நிவாரண நிதி! முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு!
Next articleமுதல் கட்ட ஜேஇஇ மெயின் தேர்வு நாளை தொடக்கம்! செய்முறை தேர்வுகளும் ஆரம்பம்! மாணவர்கள் தவிப்பு