தமிழகத்தில் இந்த பகுதியில் மட்டும் 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Photo of author

By Sakthi

தமிழ்நாட்டில் தென் தமிழகத்திலிருந்து ராயலசீமா அவரையில் நிலவிவரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த 2 நாட்களுக்கு பின் தமிழகம் மற்றும் வட கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 27ஆம் தேதி அதாவது நாளைய தினம் தென்தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது அதோடு 28 மற்றும் 29 உள்ளிட்ட தேதிகளில் தென் தமிழகத்தில் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.

மற்ற மாவட்டங்களில் எதிர்வரும் 5 நாட்களுக்கு வறண்ட வானிலையே இருக்கும் என்று சொல்லப்படுகிறது. தலைநகர் சென்னையில் இரண்டு நாட்களுக்கு நகரத்தின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.