தமிழகத்தில் இந்த 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம்!

0
206

தமிழகத்தில் நிலை வரும் வளிமண்டல மேல்டுக்கு சுழற்சியின் காரணமாக, இன்று முதல் 5 நாட்களுக்கு தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்திருக்கிறது .

ஏற்கனவே தமிழகத்தில் ஆங்காங்கே மழை அதிகரித்து வருகிறது, ஆகவே தமிழகத்தில் இருக்கின்ற ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருக்கிறது. அதிலும் காவிரியாற்றில் எப்போதும் இல்லாத அளவிற்கு அதிக அளவிலான தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. ஆகவே காவிரியாற்றின் கரையோர பகுதி மக்களுக்கு அவ்வப்போது வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கோவை, ஈரோடு, சேலம், நீலகிரி, தர்மபுரி, போன்ற மாவட்டங்களில் இன்று கனமழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது.

அதோடு தலைநகர் சென்னையில் பொறுத்தவரையில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் எனவும், நகரத்தின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்திருக்கிறது.

Previous articleஇன்று ஒரு நாள் பொது விடுமுறை அறிவித்த மாநிலம்! ஏன் தெரியுமா?
Next articleஜிம்பாப்வே அணிக்கெதிரான தொடரில் இருந்து விலகிய முக்கிய பவுலர்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here