ஜிம்பாப்வே அணிக்கெதிரான தொடரில் இருந்து விலகிய முக்கிய பவுலர்!

ஜிம்பாப்வே அணிக்கெதிரான தொடரில் இருந்து விலகிய முக்கிய பவுலர்!

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

ஆகஸ்ட் 18 முதல் 22 வரை மூன்று ஒருநாள் போட்டிகளுக்காக ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியின் 16வது உறுப்பினராக கே.எல்.ராகுல் சேர்க்கப்பட்டுள்ளார். ராகுல் அணிக்கு கேப்டனாகவும் இருப்பார், முன்பு தலைமை தாங்க இருந்த ஷிகர் தவான் இப்போது துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக இந்த தொடருக்கு ஷிகார் தவான் கேப்டனாக நியமிக்கப்பட்டு இருந்தார். காயம் காரணமாக அவதிப்பட்ட கே எல் ராகுல் நேரடியாக அசியக்கோப்பை தொடரில்தான் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்போது ஜிம்பாப்வே தொடரில் அவர் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அணியில் இடம்பெற்றிருந்த பந்துவீச்சாளரும் ஆல்ரவுண்டருமான வாஷிங்டன் சுந்தர் இங்கிலாந்தில் நடந்த ராயல் லண்டன் தொடரில் காயம் அடைந்ததன் காரணமாக விலகியுள்ளார். இந்திய வீரர்கள் ஜிம்பாப்வேக்கு சென்றுவிட்ட நிலையில் மாற்று வீரர் அறிவிக்கப்படுவாரா என்பது தெரியவில்லை.

இந்த தொடரை ஒளிபரப்ப எந்த முன்னணி தனியார் தொலைக்காட்சி சேனலும் முன்வரவில்லை என்று சொல்லப்படுகிறது. ஏனென்றால் ஜிம்பாப்வே எதிரான ஒரு நாள் போட்டியை நட்சத்திர வீரர்கள் இல்லாத இந்திய அணி விளையாடுவதைப் பார்க்க ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் இருக்காது என்பதால் தனியார் தொலைக்காட்சியில் பாராமுகம் காட்டுகின்றன. இதனால் இந்த போட்டிகள் தூர்தர்ஷனில் ஒளிபரப்பாகும் என சொல்லப்படுகிறது.

அணி

கே எல் ராகுல், ஷிகர் தவான், ருத்துராஜ் கெய்க்வாட், சுப்மன் கில், தீபக் ஹூடா, ராகுல் த்ரிபாட்டி, இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், ஷர்துல் தாகூர், குல்தீப் யாதவ், அக்‌ஷர் பட்டேல், ஆவேஸ் கான், பிரசீத் கிருஷ்ணா, முகமது சிராஜ், தீபக் சாஹர்.