இன்று தமிழக கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்!

0
102

தென் தமிழகம் டெல்டா மாவட்டங்கள் மற்றும் கடலோர பகுதிகளில் தற்சமயம் மிதமான மழை பெய்து வருகிறது. மற்ற மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவி வருகிறது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கின்ற அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, இன்று கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

நாளைய தினம் டெல்டா மாவட்டங்கள், தென் கடலோர மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவித்திருக்கின்ற வானிலை ஆய்வு மையம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி இருக்கக்கூடிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் காலை சமயங்களில் லேசான பனிமூட்டம் இருக்கும் என்று குறிப்பிட்டிருக்கிறது. சென்னையை பொறுத்த வரையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும், மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவும் இல்லை என்றும், தெரிவித்துள்ளது.

அத்துடன் இலங்கைக்கு தென்கிழக்கு தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் இடி ,மழையுடன் கூடிய சூறாவளி காற்று மணிக்கு 45 கிலோ மீட்டர் வேகத்தில் வீசுவதற்கான வாய்ப்புள்ளது என்று தெரிவித்திருக்கின்ற வானிலை ஆய்வு மையம் இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என்று தெரிவித்திருக்கிறது.

Previous articleஇந்த இரண்டு திரைப்படங்களுக்கும் இருக்கின்ற ஒற்றுமை தற்செயலா? அல்லது திட்டமிடப்பட்டதா?
Next articleஇனி அரசுப் பணிகளுக்கு இதன் மூலமாக நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்! அமைச்சர் தெரிவித்த முக்கிய தகவல்!