இந்த இரண்டு திரைப்படங்களுக்கும் இருக்கின்ற ஒற்றுமை தற்செயலா? அல்லது திட்டமிடப்பட்டதா?

0
114

நடிகர் அஜித்குமார் மற்றும் வினோத் உள்ளிட்டோரின் கூட்டணியில் உருவாகியிருக்கின்ற வலிமை திரைப்படம் இரண்டு வருடத்திற்கு மேலாக நடந்தது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இருக்கிறது. இந்த சூழ்நிலையில், இந்த படம் வெளியாவதற்கு தயார் நிலையில் இருந்தது. அதோடு இந்த படத்தின் முன்னோட்டம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று இருக்கின்ற சூழ்நிலையில், இந்த திரைப்படம் பொங்கலுக்கு வெளிவரும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

ஆனால் எதிர்பாராத விதத்தில் தமிழ்நாட்டில் புதிய வகை நோய்த்தொற்று பரவல் அதிகமாக இருப்பதன் காரணமாக, இந்த திரைப்படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக, பொங்கல் தினத்தன்று வலிமையை திரைப்படம் வெளியிடப்படும் என்ற அறிவிப்பு ஒத்தி வைக்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக, பொங்கல் தினத்தன்று வெளியிடப்படும் திரைப்படங்கள் பட்டியலிலிருந்து வலிமை திரைப்படம் விலக்கி வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த சூழ்நிலையில், இந்த திரைப்படம் தொடர்பாக பல கருத்துக்கள்.

வலிமை திரைப்படம் சமீபத்தில் தான் யு.ஏ.என்ற தணிக்கை சான்றிதழ் வாங்கி இருக்கிறது. என்று தெரிவிக்கப்படுகிறது.இதன் காரணமாக, வலிமை திரைப்படம் 3 மணி நேரம் 10 நிமிடங்கள் என்ற நிலையிலிருந்து தற்சமயம் 2 மணிநேரம் 58 நிமிடங்கள் 35 நொடிகள் என்று குறைக்கப்பட்டிருக்கிறது. இதே போன்றதொரு நிகழ்வு நடிகர் விஜயின் திரைப்படமான மாஸ்டர் திரைப்படத்திலும் இருக்கிறது.

அதாவது மாஸ்டர் திரைப்படத்தின் நீளமும் 2 மணிநேரம் 58 நிமிடங்கள் 35 நொடிகள்தான் இந்த இரண்டு திரைப்படங்களுக்கும் இருக்கின்ற ஒற்றுமையை தற்சமயம் அவருடைய ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள்.

இது தற்செயலாக நடைபெற்றதா? அல்லது வேண்டும் என்று திட்டம் தீட்டி செய்யப்பட்டதா? என்ற கேள்வியும் அவர்களிடையே இருந்து வருகின்றது. அதோடு இது குறித்த விவாதங்களும் நடிகர்கள் அஜித்குமார் மற்றும் விஜய் ரசிகர்கள் இடையே தற்சமயம் ஏற்பட்டுள்ளது.