தமிழகத்தில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு!

0
217

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், உள் தமிழகத்தில் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக, வருகின்ற 26. 01.2022 , 27. 01. 2022; கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்களான ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, சிவகங்கை, மதுரை, விருதுநகர், தேனி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும் என தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை, அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் தென்காசி, மதுரை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்தது.

Previous articleபிரிட்டன் செல்வோருக்கு அரிய வாய்ப்பு -அரசு சூப்பர் அறிவிப்பு!
Next articleமார்ச் முதல் பள்ளிகள் திறப்பு- பச்சைக்கொடி காட்டிய அரசு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here