புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாக உள்ளதால் இந்தப் பகுதி மீனவர்களுக்கு எச்சரிக்கை!! வானிலை மையம்!

0
129

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக கடந்த சில வாரங்களாகவே அனைத்து பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.

தமிழகத்தின் வானிலை நிலவரம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
தெற்கு ஆந்திர கடலோரம் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், நாமக்கல், சேலம், மதுரை ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

நாளை (அக். 9)அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. அது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைய கூடும் என்பதால் அடுத்த 3 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது. தெரிவித்துள்ளது.

Previous article10 ஆம் வகுப்பு முடித்து தமிழ் எழுத படிக்க தெரிந்தால் போதும்! கோவிலில் வேலை!
Next articleதமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு !!