சந்திரமுகி 2 மரண பயத்தை காட்டப் போகிறது… பாடத்தை பார்த்தவர் அளித்த திரை விமர்சனம்…!

0
41

சந்திரமுகி 2 மரண பயத்தை காட்டப் போகிறது… பாடத்தை பார்த்தவர் அளித்த திரை விமர்சனம்…

 

இயக்குநர் பி வாசு இயக்கத்தில் உருவாகியுள்ள சந்திரமுகி 2 திரைப்படத்தை பார்த்த நபர் சந்திரமுகி 2 திரைப்படம் மரண பயத்தை அளிக்கப் போகின்றது என்று படத்தை பற்றி பேசியுள்ளார். இதனால் இரசிகர்கள் பலரும் எதிர்பார்ப்பில் காத்துக் கொண்டுள்ளனர்.

 

இயக்குநர் பி வாசு மற்றும் நடிகர் ரஜினிகாந்த் கூட்டணியில் 2005இல் வெளியான திரைப்படம் சந்திரமுகி. இந்தி திரைப்படத்தில் நடிகை ஜோதிகா, நடிகை நயன்தாரா, நடிகர் வடிவேலு, நடிகர் நாசர், நடிகர் சோனு சூத் மற்றும் பலர் நடித்திருந்தனர்.

 

நடிகர் மோகன் லால், ஷோபானா நடிப்பில் இயக்குநர் ஃபசில் இயக்கத்தில் 1993ம் ஆண்டு மணிச்சித்ரத்தாழ் திரைப்படம் வெளியாகி மாபெரும் ஹிட் கொடுத்தது. இந்த மலையாளத் திரைப்படத்தின் தமிழ் ரீமேக் தான் சந்திரமுகி திரைப்படம் ஆகும்.

 

சந்திரமுகி திரைப்படம் தமிழில் வெளியாகி மாபெரும் ஹிட்.கொடுத்தது. 890 நாட்களுக்கும் மேல் திரையரங்குகளில் சந்திரமுகி திரைப்படம் திரையிடப்பட்டது. அந்த சமயமே சந்திரமுகி திரைப்படம் 75 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்தது. இந்நிலையில் ரசிகர்கள் பலரும் சந்திரமுகி திரைப்படத்தின் இரண்டாவது பாகம் எப்பொழுது வரும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில் சந்திரமுகி திரைப்படத்தின் இரண்டாவது பாகம் 17 வருடங்களுக்கு பிறகு உருவாகியுள்ளது.

 

சந்திரமுகி 2 திரைப்படத்தை இயக்குநர் பி வாசு அவர்களே இயக்கியுள்ளார். சந்திரமுகி 2 திரைப்படத்தில் வேட்டையன் கதாப்பாத்திரத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் நடித்துள்ளார். சந்திரமுகி கதாப்பாத்திரத்தில் நடிகை கங்கனா ரணாவத் நடித்துள்ளார். மேலும் வடிவேலு, ராதிகா சரத்குமார், மஹிமா நம்பியார், ஸ்ருஸ்டி தாங்கே, லக்சுமி மேனன் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்திற்கு இசையமைத்த கீராவாணி அவர்கள் சந்திரமுகி 2 திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பாக சுபாஸ்கரன் இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளார்.

 

இந்நிலையில் சந்திரமுகி 2 திரைப்படத்தை பார்த்துவிட்ட படத்தின் இசையமைப்பாளர் கீராவாணி அவர்கள் சந்திரமுகி 2 திரைப்படத்தை பற்றி டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 

இசையமைப்பாளர் கீராவாணி அவர்கள் பதிவுட்டுள்ள டுவிட்டர் பதிவில் “சந்திரமுகி 2 படம் பார்த்தேன். சந்திரமுகி 2 திரைப்படத்தில் வரும் கதாப்பாத்திரங்கள் மரண பயத்தை ஏற்படுத்துவதோடு தூக்கமில்லாத இரவுகளை கொடுக்கும். என் முயற்சியால் மனதை கவரும் காட்சிகளுக்கு சிறப்பான இசையை கொடுத்துள்ளேன். இரண்டு மாதங்களாக தூக்கம் இல்லாமல் உழைத்திருக்கிறேன்” என்று அவர் பதிவிட்டுள்ளார். சந்திரமுகி திரைப்படம் செப்டம்பர் மாதம் 19ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.