பொது தரிசன பக்தர்களுக்கு இருக்கை வசதி… பழனி முருகன் கோவில் தேவஸ்தானம் ஏற்பாடு… !

0
62

பொது தரிசன பக்தர்களுக்கு இருக்கை வசதி… பழனி முருகன் கோவில் தேவஸ்தானம் ஏற்பாடு…

 

பழனி முருகன் கோவிலில் பொது தரிசன வழியில் முருகனை பார்க்க வரும் பக்தர்களுக்கும் இருக்கை வசதியை பழனி முருகன் கோவில் தேவஸ்தானம் ஏற்பாடு செய்துள்ளது.

 

தமிழ் கடவுள் என்று அழைக்கப்படும் முருகன் கோவில்களில் அதாவது அறுபடை கோவில்களில் மூன்றாம் படை வீடான பழனி கோவிலுக்கு முருகனை தரிசிக்க வெளியூர், வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு வருகின்றனர். முருகனை தரிசிக்க கோவிலுக்கு வரும் பக்தர்கள் பொது தரிசனம், 10 ரூபாய் டிக்கெட் வழி, 100 ரூபாய் டிக்கெட் வழி என்று மூன்று வழிகளில் முருகனை தரிசனம் செய்கின்றனர்.

 

இதில் 100 ரூபாய் டிக்கெட் எடுத்து முருகனை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு தங்களின் தரிசனம் நேரம் வரும் வரை காத்திருப்பு அறையில் காத்திருக்க வேண்டும். அவர்கள் காத்திருக்கும் அறையில் இருக்கை வசதியுடன் எல்.இ.டி டிவி, மின்விசிறி போன்ற வசதிகள் உள்ளது.

 

அதைப் போலவே கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் 10 ரூபாய் செலுத்தி முருகனை தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கும் காத்திருப்பு அறை துவங்கப்பட்டு இருக்கை வசதி, மின் விசிறி வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டது. இதையடுத்து பொது தரிசனம் வழியில் முருகனை தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கும் காத்திருப்பு அறை வசதியை பழனி முருகன் கோவில் தேவஸ்தானம் ஏற்பாடு செய்துள்ளது.

 

இதற்கு முன்பு காத்திருப்பு அறை இல்லாத காரணத்தினாலும், இருக்கை வசதி இல்லாத காரணத்தினாலும் பொது தரிசன வழியில் செல்லும் வயதானவர்கள்,  முதியவர்கள், குழந்தைகள் ஆகியோர் நீண்ட நேரம் நின்றபடி காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு 3 லட்சத்து 50 ரூபாய் மதிப்பில் நாயக்கர் மண்டபத்தில் 210 இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. அது மட்டுமில்லாமல் அவர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதியும் அமைத்து தரப்பட்டுள்ளது. இதையடுத்து பொது தரிசன வழியில் வரும் பக்தர்கள் யாரும் நீண்ட நேரம் நிக்க வேண்டிய தேவை இல்லை. பழனி முருகன் கோவில் தேவஸ்தானம் செய்துள்ள இந்த வசதியால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.