சந்திரமுகி 2 திரைப்படம் வெளியீட்டு தேதி மாற்றம்!!! அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியீடு!!!

0
40
#image_title

சந்திரமுகி 2 திரைப்படம் வெளியீட்டு தேதி மாற்றம்!!! அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியீடு!!!

இயக்குநர் வாசு இயக்கத்தில் உருவாகி உள்ள சந்திரமுகி 2 திரைப்படம் செப்டம்பர் 15ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் சந்திரமுகி 2 திரைப்படத்தின் ரிலீஸ் தள்ளிப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இயக்குநர் வாசு இயக்கத்தில் நடிகர்கள் ராகவா லாரன்ஸ், வடிவேலு, கங்கனா ரனாவத், ராதிகா சரத்குமார், ஸ்ருஷ்டி தாங்கே, மஹிமா நம்பியார் மற்றும் பலர் நடிப்பில் சந்திரமுகி 2 திரைப்படம் உருவாகியுள்ளது.

சந்திரமுகி 2 திரைப்படத்தை லைகா நிறுவனம் சார்பாக சுபாஸ்கரன் தயாரித்துள்ளார். ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்திற்கு இசையமைத்த எம்.எம் கீராவாணி அவர்கள் இசையமைத்துள்ளார். சந்திரமுகி 2 திரைப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது. மேலும் சந்திரமுகி 2 திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவும் சமீபத்தில் நடைபெற்றது.

செப்டம்பர் 15ம் தேதி சந்திரமுகி 2 திரைப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சந்திரமுகி 2 திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு தள்ளி வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதாவது செப்டம்பர் 15ம் தேதி நடிகர்கள் விஷால், எஸ் ஜே சூரியா நடிப்பில் உருவாகியுள்ள மார்க் ஆண்டனி திரைப்படமும் வெளியாகவுள்ளது. மார்க் ஆண்டனி திரைப்படத்தை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் அவர்கள் இயக்கியுள்ளார்.

மார்க் ஆண்டனி திரைப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் சந்திரமுகி 2 திரைப்படத்தின் டிரெய்லரை விட மார்க் ஆண்டனி திரைப்படத்தின் டிரெய்லர் அதிக எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இதனால் சந்திரமுகி 2 திரைப்படத்தின் ரிலீஸை தள்ளி வைக்க தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.

மேலும் சந்திரமுகி 2 திரைப்படத்தின் ரிலீஸ் செப்டம்பர் 15ம் தேதியில் இருந்து செப்டம்பர் 28ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. செப்டம்பர் 28ம் தேதி நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள இறைவன் திரைப்படம் வெளியாகவுள்ளது. மேலும் இறைவன் திரைப்படத்தின் டிரெய்லரும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.