சந்திரயான்  3 நாளை நிலவு பயணத்தை தொடங்கிறது!! இஸ்ரோ வெளியிட்ட தகவல்!!

0
93
Chandrayaan 3 starts its mission to the moon tomorrow!! Information released by ISRO!!
Chandrayaan 3 starts its mission to the moon tomorrow!! Information released by ISRO!!

சந்திரயான்  3 நாளை நிலவு பயணத்தை தொடங்கிறது!! இஸ்ரோ வெளியிட்ட தகவல்!!

அதன் பின் இஸ்ரோ நிறுவனம்  சந்திராயன் 3 நவீன வசதிகளுடன் உருவாக்கியது. இது ஜூலை மாதம் 14 ஆம் தேதி வெள்ளிக்கிழமை ஸ்ரீஹரி கோட்டாவில் இருந்து நிலவிற்கு ஏவப்படப்பட்டது. இந்த விண்கலன் இந்தியா அனுப்ப உள்ள சந்திராயன் 3 விண்கலன் மட்டுமே நிலவின் தென் துருவத்தில் பயணிக்க உள்ளது.மேலும்  இந்த விண்கலம் வெற்றிகரமாக விண்ணியில் ஏவப்பட்டால் நிலவு குறித்து அதிகபடியான உண்மைகள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விண்கலத்தை பூமியில் இருந்து எல்.வி.எம்.3 ராக்கெட் நிலவிற்கு கொண்டு சென்றது.  மேலும் சந்திரயான் 3 விண்கலத்தில் உள்ள ‘இன்டர்பிளானட்டரி’ என்ற எந்திரத்தில்  3 முக்கிய பகுதிகள்  உள்ளது. ராக்கெட்டில் உள்ள ‘புரபுல்சன்’ பகுதி விண்கலத்தில் உள்ள ரோவர், லேண்டர் பகுதியை நிலவில் 100 கி.மீ. தொலைவுக்கு கொண்டு செல்லும் வகையில் வடிவமைத்து பொருத்தப்பட்டு உள்ளது. விண்கலன் ஏவப்பட நாள் முதல் இஸ்ரோ சந்திராயன் 3 யை கண்காணித்து வருகிறது.

அதன் பின் ஏவப்பட்ட அடுத்த நாளில் புவி வட்டப் பாதையில் முதல் நிலையை அடைந்தது. அதனையடுத்து  41,762 கிலோ மீட்டர் தொலை தூரத்தியில் உள்ள முதலாவது சுற்றுப் பாதையை அடைந்துள்ளது. அதனை தொடந்து ஜூலை 17 ஆம் தேதி இரண்டாவது சுற்றுப் பாதையை அடைந்துள்ளது என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

மேலும் தொடர்ச்சியாக ஜூலை 18 ஆம் தேதி மூன்றாவது சுற்றுப் பாதையை அடைந்தது. இந்த நிலையில் இன்று வெற்றிகரமாக நான்காவது சுற்றுப் பாதைக்குள் செலுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை இஸ்ரோ கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. அதனை தொடர்ந்து ஜூலை 25 ஆம் தேதி பிற்பகல் 2 முதல் 3 மணி அளவில் 5 வது சுற்றுப் பாதைக்குள் செலுத்தப்பட்டது.

அதன் பின்னர் நிலவு பயணத்தை ஆரம்பித்தது. இந்த நிலையில் சந்திரயான் 3 விண்கலம் நிலவை நோக்கி பயணித்து வருகிறது. அதனை தொடர்ந்து ஆகஸ்ட் 1 ஆம் தேதி நள்ளிரவு 12 முதல் 1 மணி அளவில் நிலவின் நீள் வட்டப் பாதைக்குள் விண்கலம் பயணிக்க உள்ளது என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

Previous articleமீண்டும் 24 மீனவர்கள் சிறைபிடிப்பு!! பேச்சவார்த்தை நடத்துகின்ற மாநில அரசு!!
Next articleஅட்லீ இயக்கிய ஹிந்தி படத்தின் முதல் பாடல் வெளியீடு!!