சந்திராயன் 3 வெற்றிகரமாக நிலவிற்கு  சென்றடையும்!! தமிழக கோவில்களில் சிறப்பு வழிபாடு!!

0
85
Chandrayaan 3 successfully reaches the moon!! Special Worship in Tamilnadu Temples!!
Chandrayaan 3 successfully reaches the moon!! Special Worship in Tamilnadu Temples!!

சந்திராயன் 3 வெற்றிகரமாக நிலவிற்கு  சென்றடையும்!! தமிழக கோவில்களில் சிறப்பு வழிபாடு!!

இந்திய  விண்வெளி ஆய்வு நிறுவனம் நிலவை ஆய்வு செய்வதற்கு 2008 ஆம் ஆண்டு சந்திராயன்1 விண்ணில் செலுத்தப்பட்டது. அந்த விண்கலம் நிலவில் தண்ணீர் இருக்கிறது என்று உறுதி செய்தது.  அதனையடுத்து  சந்திராயன் 2 நவீன வசதிகளுடன் விண்கலன் உருவாக்கப்பட்டது. ஆனால் அந்த விண்கலம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நிலவில் மோதி செயலிழந்தது.

அதன் பின் இஸ்ரோ நிறுவனம் மீண்டும் சந்திராயன் 3 விண்கலம் உருவாக்க திட்டமிடப்பட்டது. இந்த விண்கலம் நிலவை முழுவதும் ஆய்வு செய்யும் வகையில் உருவாக்க திட்டமிடப்பட்டது. இந்த நிலையில் சந்திராயன் 3 விண்கலம் நவீன வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இது இன்று  வெள்ளிக்கிழமை ஸ்ரீஹரி கோட்டாவில் இருந்து நிலவிற்கு ஏவப்பட உள்ளது.

மேலும் இந்தியா அனுப்ப உள்ள சந்திராயன் 3 விண்கலன் மட்டுமே நிலவின் தென் துருவத்தில் பயணிக்க உள்ளது. மேலும் இந்த விண்கலம் வெற்றிகரமாக விண்ணியில் ஏவப்பட்டால் நிலவு குறித்து அதிகபடியான உண்மைகள் வெளிவரும். இந்த விண்கலத்தை பூமியில் இருந்து எல்.வி.எம்.3 ராக்கெட் நிலவிற்கு கொண்டு செல்ல இருக்கிறது.

இந்த சந்திராயன் இன்று  செலுத்தப்பட உள்ளதால்  இந்தியாவிற்கு மிக பெரியளவில் பெருமை சேர்க்க உள்ளது. இந்த நிலையில் சந்திராயன் 3 விண்கலன் வெற்றிகரமாக நிலவை சென்றடைய வேண்டும் என தமிழக கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. கும்பகோணம் மாவட்டம் அருகே உள்ள திங்களூர் சந்திரனார் கோவில் உள்ளது.

இந்த புகழ் பெற்ற திங்களூர் நவகிராக ஸ்தலமான சந்திரானர் கோவிலில் சந்திராயன் 3 க்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. இந்த கோவிலில் இன்று காலை 8 மணி முதல் 10 மணி வரை சிறப்பு  யாகம் மற்றும் சந்திர பகவானுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

அதனையடுத்து 100 பேருக்கு சிறந்த அன்னதானம் வழங்கப்பட உள்ளது. மேலும் 2008 ஆம் ஆண்டு சந்திராயன் 1 நிலவுக்கு அனுப்பும் போது இந்த கோவில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.  மேலும் சந்திக்ராயன் 3 நிலவுக்கு வெற்றிகரமாக செல்ல நேற்று திருப்பதி கோவிலில் மினியேட்சர் மடலை வைத்து சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.  ஆனால் 2019 ஆம் ஆண்டு  சந்திராயன் 2 நிலவுக்கு செல்லும் பொது இந்த கோவிலில் வழிபாடு நடத்தபடவில்லை. அதன் பின் சந்திராயன் 2 தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Previous articleமத்திய அரசிடம் கோரிக்கை எழுப்பிய தமிழக அரசு!! இனி விலைவாசி குறைய போகின்றது!!
Next articleஉளவுத்துறையிடம் ரிப்போர்ட்களை கேட்ட ஸ்டாலின்!! அமைச்சர்களுக்கான குறுக்கு கவனிப்பு!!