இன்றைய காலகட்டத்தில் குடிப்பழக்கம் என்பது இளைஞர்களிடையே ஒரு மகிழ்ச்சி தரும் பழக்கமாக மாறி வருவதோடு , அவர்களை அடிமையாக்கி வருகின்றது . குடிப்பழக்கம் பொதுவாகவே மனிதனின் தற்கொலை எண்ணம் , உடல் நலக்கேடு உள்ளிட்ட பல தீமைகளை தந்து வருவதோடு ,குடி பழக்கத்தை எளிதில் விட இயலாத நிலையிலும் இளைஞர்கள் தள்ளப்பட்டு வருகின்றனர்.
இச்சூழ்நிலையில் கொரோனா நோய்தொற்று காலத்தில் இளைஞர்கள் குடிப்பழக்கம் முன்பை விட குறைந்து வருவதாக சமூக ஆய்வில் தெரியவந்துள்ளது . கொரோனா நோய் தொற்றினால் பலர் உயிரிலந்து வரும் நிலையில் , குடிப்பழக்கம் விட்டு வருவது ஒரு நன்மை செயலாக நிகழ்ந்துள்ளது.
பொதுவாக குடிப்பழக்கம் குறைய முக்கிய காரணம் பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களை மூடப்பட்டிருப்பதால் தான் குறைந்து வந்துள்ளது என கூறப்படுகிறது .ஏனெனில் கொரோனா காலத்தில் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டு இருப்பதனால், மாணவர்கள் தங்களது பெற்றோர்களுடன் வசித்து வரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்கள் தனது நண்பர்களை சந்திக்க முடியாமல் இருந்துள்ளது . இதுவே குடிப்பழக்கம் குறைய முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.
இது குறித்து இளைஞர்களிடம் ஆய்வு மேற்கொண்ட பொழுது கொரோனா காலத்தில் முன்னும் பின்னும் குடிப்பழக்கம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது . அதில் பெற்றோர்களுடன் இருந்த மாணவர்கள் மதுவின் அளவு மற்றும் குடிக்கும் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்துள்ளது தெரியவந்துள்ளது.
அதேசமயம் நண்பர்களுடன் இருக்கும் இளைஞர்கள் முன்பைவிட குடிப்பழக்கம் சற்று அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது