இவர்களுக்கு மட்டும் தான் சிலிண்டர் விலையில் மாற்றம்! எண்ணெய் நிறுவனம் வெளியிட்ட அதிர்ச்சி பட்டியல்!

0
79

இவர்களுக்கு மட்டும் தான் சிலிண்டர் விலையில் மாற்றம்! எண்ணெய் நிறுவனம் வெளியிட்ட அதிர்ச்சி பட்டியல்!

 ஓராண்டு காலத்தில் வீட்டு உபயோகம் மற்றும் வணிக உபயோகம் சிலிண்டர் விலை யாரும் எதிர்பார்க்காத வகையில் ஏறிவிட்டது.சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை மற்றும் அமெரிக்கா டாலரின் இந்திய மதிப்பு ஏற்றம் இறக்கம் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது.கடந்த மாதத்தில் மட்டும் இரண்டு முறை வீட்டு சமையல் எரிவாயு விலையை ஏற்றிவிட்டனர். அதே போல கடைகளில் உபயோகம் செய்யும் சிலிண்டர் விலையும் ஏறிவிட்டது.இதனால் கடை வைத்து நடத்துபவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

குறிப்பாக சிறிதளவில் டீ கடை போன்று நடத்துபவர்கள் வணிகம் பெருமளவு பாதிக்கப்பட்டது.கடந்த மூன்று மாதங்களாக நடைபெற்று வரும் எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பில் வீட்டு உபயோக சிலிண்டரில் எந்தவித மாற்றமும் இல்லை.மே மாதம் உயர்த்தப்பட்ட சமையல் எரிவாயு விலையே இப்போது வரை உள்ளது.ஆனால் வணிக உபயோக சிலிண்டர் விலை மட்டும் மாதம் தோறும் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது.கடந்த மே மாதம் இரண்டாயிரம் ரூபாயை தாண்டியது.

அதனையடுத்து ஜூன் மாதம் நடைபெற்ற கூட்டமைப்பில் வெளிவந்த விலை பட்டியலில் வணிக ரீதியாக உபயோகம் செய்யும் சிலிண்டர் விலை மட்டும் ரூ.134 ஆக குறைக்கப்பட்டது.அதனையடுத்து ஜூலை மாதம் நடைபெற்ற கூட்டமைப்பிலும் வணிக சிலிண்டர் விலை குறைக்கப்பட்டது.2,373ஆக இருந்த விலை 2,186 ஆக மாறியது.அதனையடுத்து அதே மாதம் வணிக சிலிண்டர் விலை குறைத்தனர்.2,186 ஆக உள்ள சிலிண்டர் விலை ரூ.8.50 குறைக்கப்பட்டது.தற்போது நடப்பு மாதம் வெளியிட்ட விலை பட்டியலில் தற்போதுள்ள விலையில் இருந்து ரூ.36.50 ஆக குறைத்துள்ளனர்.அந்தவகையில் இந்த மாதம் வணிக சிலிண்டர் விலை ரூ.2,144 விற்பனை செய்யப்படும்.மாவட்டத்திற்கு ஏற்ப சிறிதளவு விலையில் மாற்றம் இருக்கும்.