காலை உணவு திட்டத்தால் பள்ளிகளில் ஏற்பட்ட மாற்றம்! சேலத்தில் பேசிய உதயநிதி!

0
249
Change in schools due to breakfast program! Udhayanidhi who spoke in Salem!
Change in schools due to breakfast program! Udhayanidhi who spoke in Salem!

காலை உணவு திட்டத்தால் பள்ளிகளில் ஏற்பட்ட மாற்றம்! சேலத்தில் பேசிய உதயநிதி!

நேற்று முதல்வர் முக ஸ்டாலின் சேலத்தில் வருகை புரிந்தார். சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் 2 வது நாளாக இன்று சேலம் மண்டலத்திற்கு உட்பட்ட கள ஆய்வு கூட்டம் நடைபெற்று வருகின்றது. இந்த கள ஆய்வில் பங்கேற்பதற்காக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகை புரிந்தார்.

மேலும் அவர் திடீரென அரசு பள்ளிகளில் வழங்கப்பட்டு வரும் காலை சிற்றுண்டி திட்டத்தை ஆய்வு மேற்கொண்டார். சேலம் மணியனூர் மற்றும் நெத்திமேடு பகுதியில் உள்ள மாநகராட்சி தொடக்க பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டார். அவர் சமையல் செய்யும் இடத்தையும் பார்வையிட்டார். அதனை தொடர்ந்து குழந்தைகளிடம் தங்களுடைய குறைகள் பற்றி கூறுங்கள் என கேட்டறிந்தார்.

இது குறித்து அவர் கூறுகையில் தமிழக அரசின் மிக உன்னதமான காலை சிற்றுண்டி திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு சிற்றுண்டிகள் முறையாக வழங்கப்படுகின்றதா  என ஆய்வு மேற்கொண்டேன்.இதில் குழந்தைகள் ஒரு சில குறைகளை கூறியுள்ளனார்கள். அதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். காலை சிற்றுண்டி திட்டம் தொடங்கியதற்கு காரணமே குழந்தைகள் பள்ளிக்கு வர வேண்டும் என்ற நோக்கத்தில் தான் தொடங்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் இந்த திட்டம் அமல்படுதப்பட்டத்தில் இருந்தே அதிகளவு குழந்தைகள் பள்ளிக்கு வர தொடங்கி உள்ளனர். காலை சிற்றுண்டியில் தினமும் ஒவ்வொரு வகையான உணவு வகை வழங்கப்படுகின்றது. மேலும் அனைத்து மாணவர்களுக்கும் பாரபட்சம் இல்லாமல் உணவு வழங்க வேண்டும், உணவு வழங்குவதை குறித்து வைக்க கையேடு வழங்கப்பட்டுள்ளது. அதனை முறையாக பாரமரிக்க வேண்டும் என கூறினார்.

Previous articleதிடீரென வெடித்த வெடி! கிணறு தோண்டும் போது ஏற்பட்ட விபரீதம்! 
Next articleசென்னை வாசிகளுக்கு குட் நியூஸ்.. இனி மூன்றுக்கும் ஒரே டிக்கெட் தான்!! முதல்வரின் மாஸ் நடவடிக்கை!!