ஆசிரியர் பணி நியமனத்தில் ஏற்பட்ட மாற்றம்? விரைவில் வெளியாகவுள்ள அறிவிப்பு

Photo of author

By Anand

ஆசிரியர் பணி நியமனத்தில் ஏற்பட்ட மாற்றம்? விரைவில் வெளியாகவுள்ள அறிவிப்பு

தமிழகத்தில் ஆசிரியர் பணி நியமனத்தில் தற்போதுள்ள வயது வரம்பை உயர்த்தி அறிவிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இதுகுறித்து முறையான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கபடுகிறது.

தமிழக பள்ளிகல்வித்துறை சார்பில் நியமிக்கப்படும் ஆசிரியர் மற்றும் ஊழியர்களுக்கான வயது வரம்பு 57 என நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.ஆசிரியர்களின் ஓய்வு பெறும் வயதானது 58 ஆக இருந்தது.இதன் அடிப்படையில் ஓய்வு பெரும் ஒரு வருடத்திற்கு முன்பு வரை ஆசிரியர் நியமனம் செய்யலாம் என்பது வழக்கத்தில் இருந்தது.

இந்நிலையில் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்தி அரசு அறிவித்துள்ளது.அந்த அடிப்படையில் 59 வயது வரை பணி நியமனம் பெறலாம் என ஆசிரியர் பணிக்கு காத்திருந்தவர்கள் எதிர்பார்த்தனர்.ஆனால் அவர்களின் எதிர்பார்ப்பிற்கு மாறாக பணி நியமன வயதை 40 குறைத்து அறிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரசு பள்ளிகளில் காலியாகவுள்ள 2,207 முதுநிலை ஆசிரியர் நியமனத்துக்கான தேர்வு, சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பில் தான் புதிய வயது வரம்பு அமலுக்கு வந்துள்ளது. இதனையடுத்து அரசின் இந்த முடிவுக்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

ஆசிரியர் பணிக்கு என படித்து பல ஆண்டுகளாக காத்திருக்கும் நபர்களுக்கு இந்த புதிய வயது வரம்பால் வேலை கிடைக்காத சூழல் ஏற்பட்டுள்ளது.குறிப்பாக அரசும் பல ஆண்டுகளாக பணி நியமனத்தை தாமதித்து வரும் சூழலில் இந்த திடீர் வயது வரம்பு மாற்றம் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

இதுதொடர்பாக, ஆசிரியர் பணிக்கு படித்த பட்டதாரிகள் தரப்பில், சென்னையில் பல்வேறு கட்ட போராட்டங்களும் நடந்தன.இந்நிலையில், ஆசிரியர்களின் நியமன வயது வரம்பை மீண்டும்  உயர்த்துவது தொடர்பாக, பள்ளி கல்வித்துறை ஆலோசித்து வருகிறது என்று கூறப்படுகிறது.இது தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி அந்த அறிக்கையை தமிழக முதல்வரிடம் சமர்ப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து இந்த வயது வரம்பு உயர்த்துவது தொடர்பாக ஒரு வாரத்தில் அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வாறு வயது வரம்பு அதிகரிக்கப்பட்டால், ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள முதுநிலை ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்க, மேலும் கூடுதல் கால அவகாசம் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.