இந்தத் தேர்வின் தேதியில் மாற்றம்! டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட தகவல்!

Photo of author

By Parthipan K

இந்தத் தேர்வின் தேதியில் மாற்றம்! டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட தகவல்!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் ஒருங்கிணைந்த பொறியியல் சார்ந்த பணிகளில் நெடுஞ்சாலை, பொதுப்பணி, ஊராட்சி நகர அமைப்பு போன்ற துறைகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப உள்ளது. மேலும் இதற்கு மொத்தம் 1083 பணி  இடங்களுக்கான இந்த தேர்வு வரும் மார்ச் மாதம் 27ஆம் தேதி நடைபெற உள்ளது என அறிவித்துள்ளது.

மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக பல்வேறு தேர்வுகளும் நடத்தப்படாமல் இருந்தது. கடந்த வருடம் முதலில் நடத்தப்பட்டு வருகின்றது. அந்த வகையில் டிஎன்பிஎஸ்சியால் நடத்தப்படும் மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் உதவி வன பாதுகாவலர் பணிகளுக்கான முதுநிலை தேர்வுகள் 20.4.2013 மற்றும் 3 5 2019 ஆகிய தேதிகளில் நடைபெறும் என முன்னதாகவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனை முழுவதும் கணினி வழி தேர்வாகவே நடத்த இருப்பதனால் பழைய தேதிகள் மாற்றப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி  அறிவித்துள்ளது. இதற்கான திருத்தப்பட்ட தேதிகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.