ரயில்வே துறைக்கு அதிகாரிகள் நியமனம் முறையில் மாற்றம்! சரியான காரணம் இன்னுமும் வெளியிடவில்லை!

Photo of author

By Parthipan K

ரயில்வே துறைக்கு அதிகாரிகள் நியமனம் முறையில் மாற்றம்! சரியான காரணம் இன்னுமும் வெளியிடவில்லை!

ரயில்வே துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் கடந்த 2022 ஆம் ஆண்டுக்கான யு.பி.எஸ்.சி சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வுகள் கடந்த ஜூன் மாதம் ஐந்தாம் தேதி நடைபெறும் என முன்னதாக அறிவிக்கப்பட்டது ஆனால் மீண்டு தேர்வு ஒத்திவைக்கப்பட்டது.அந்த தேர்வின் மூலமாக கடந்த ஆண்டு சிவில் சர்வீஸ் பணியிடங்களில் 861 காலி பணியிடங்கள் நிரப்பட்டது.மேலும் அந்த தேர்வு கடந்த அக்டோபர் மாதம் 10 ஆம் தேதி நடத்தப்பட்டது.

தற்போது ரயில்வே துறையில் இந்திய ரயில்வே நிர்வாக சேவைக்காக அதிகாரிகள் தேர்வு செய்யவதற்கு யு.பி.எஸ்.சி மூலம் சிறப்பு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றது.ஆனால் இந்த தேர்விற்கு பதிலாக யு.பி.எஸ்.சி மூலமாக சிவில் சர்வீசஸ் தேர்வு மூலமாகவே அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள் என ரயில்வே அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று வெளியிட்ட அறிவிப்பில் ரயில்வே அமைச்சகம் யு.பி.எஸ்.சி மற்றும் பணியாளர் நலத்துறை அமைச்சகத்துடன் ஆலோசனை நடத்தப்பட்டு யு.பி.எஸ்.சி யால் நடப்பாண்டுக்கான சிவில் சர்வீசஸ் தேர்வு மூலமாக இந்திய ரயில்வே நிர்வாக சேவைக்கு ஆள்சேர்ப்பு நடத்தப்படும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.இந்த திடீர் மாற்றத்திற்கான காரணத்தை ரயில்வே அமைச்சகம் வெளியிடவில்லை.