கல்லூரிகள் செயல்படும் நேரத்தில் மாற்றம்! அதிருப்தியில் மாணவர்கள்!

Photo of author

By Parthipan K

கல்லூரிகள் செயல்படும் நேரத்தில் மாற்றம்! அதிருப்தியில் மாணவர்கள்!

Parthipan K

Change in the working hours of colleges! Dissatisfied students!

கல்லூரிகள் செயல்படும் நேரத்தில் மாற்றம்! அதிருப்தியில் மாணவர்கள்!

கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகாளாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டது.அனைத்து வகுப்புகளும் ஆன்லைன் மூலமாக தான் நடத்தப்பட்டது.பொது தேர்வு மற்றும் செமஸ்டர் தேர்வுகள் அனைத்தும் ஆன்லைன்  மூலமாகத்தான் நடத்தப்பட்டது.போட்டி தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது.மேலும் கடந்த 2022 ஆம் ஆண்டுதான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் அவரவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர்.

பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மீண்டும் திறக்கப்பட்டு வகுப்புகள் அனைத்தும் நேரடியாக தொடங்கப்பட்டுள்ளது.கடந்த டிசம்பர் மாதம் வங்ககடலில் தென்கிழக்கு பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுபெற்றுது.அந்த புயலிற்கு மாண்டஸ் என்று பெயர்வைக்கப்பட்டது.அந்த புயலின் காரணமாக தமிழகத்தில் கனமழை பெய்தது.அதனால் தமிழகத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டது.

மேலும் கடந்த டிசம்பர் மாதம் இறுதியில் பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வும்,கல்லூரிகளுக்கு பருவத்தேர்வும் நடைபெற்று விடுமுறை அறிவிக்கப்பட்டது.கடந்த ஜனவரி 2 ஆம் தேதி தான் மீண்டும் வகுப்புகள் தொடங்கப்பட்டது.கடந்த ஜனவரி 15 ஆம் தேதி பொங்கல் பண்டிகைக்கு நான்கு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது.

இவ்வாறு அதிகளவு விடுமுறை விடப்பட்டதன் மூலமாக தமிழக உயர்கல்வித்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அந்த அறிவிப்பில் தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு கூடுதல் நேரம் வகுப்புகள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.நடப்பு கல்வியாண்டின் பாடத்திட்டத்தை விரைந்து முடிக்க இந்த நேரம் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.அந்தவகையில் கூடுதலாக ஒரு மணி நேரம் வகுப்பு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.