இந்த அரசு பணியாளர்களுக்கு மகப்பேறு விடுமுறையில் மாற்றம்! தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!
தமிழக அரசின் கீழ் பணி புரியும் பெண் ஊழியர்கள் அனைவருக்கும் அவர்களின் மகப்பேறு விடுமுறையாக முதலில் மூன்று மாத காலம் மட்டுமே அளிக்கப்பட்டு வந்தது. அதனை அடுத்து 2016 ஆம் ஆண்டு சட்ட திருத்தம் செய்யப்பட்டு மூன்று மாதத்தில் இருந்து ஐந்து மாதமாக விடுப்பை உயர்த்தினார். உடல்நிலை இந்த ஐந்து மாதத்தில் சீராக இல்லாத நிலையில் கூடுதலாக விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.
இவ்வாறு இருந்து வந்த நிலையில் திமுக ஆட்சிக்கு வந்தால் 365 நாட்களும் விடுப்பு அளிக்கப்படும் என்று தெரிவித்தது. அதேபோல ஆட்சிக்கு வந்ததும் அத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. அந்த வகையில் அரசு பெண் ஊழியர்கள் அனைவருக்கும் கர்ப்ப கால நேரத்தில் 365 நாட்களுக்கும் விடுப்பாளிக்கப்பட்டுள்ளது. குழந்தை பிறந்தவுடன் இறந்தாலோ அல்லது சிறிது காலம் கழித்து இறந்தாலும் கூட இந்த விடுமுறை திட்டம் பொருந்தும் எனக் கூறினர். அதேபோல மக்கள் நல்வாழ்வு துறையில் ஒப்பந்தம் அடிப்படையில் பணிபுரியும் பெண்களுக்கும் ஆறு மாத காலம் வரை மகப்பேறு விடுமுறை அளிக்கப்படும் என்று தெரிவித்தனர்.
தற்பொழுது அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலகங்களில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு புதிய அறிவிப்பு ஒன்றை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலகங்களில் பணிபுரியும் பெண் ஊழியர்கள் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றெடுத்தால் அவர்களுக்கு 270 நாட்கள் மட்டுமே விடுமுறை என கூறியுள்ளனர். மற்ற அரசு பெண் ஊழியர்களை போல இவர்களுக்கு முழு தெரிவு செய்து நாட்களுக்கான விடுமுறை பொருந்தாது என திட்டவட்டமாக கூறியுள்ளனர்.