ரெப்போ வீடு மற்றும் வாகன கடன் வட்டி உள்ளிட்டவற்றில் மாற்றங்கள் ஏற்படுமா? ஆர்பிஐ புதிய விளக்கம்!

Photo of author

By Sakthi

இந்திய ரிசர்வ் வங்கியின் வருடம் தோறும் பணக்கொள்கை குழு கூட்டம் நடைபெறுவது வழக்கம் இந்தக் கூட்டத்தில் வாங்கி சார்ந்த முக்கிய முடிவுகள் மேற்கொள்ளப்படும். அந்த ரதத்தில் தற்சமயம் கடன்களுக்கான வட்டி விகிதங்கள் தொடர்பான அறிவிப்பு வெளியாக இருக்கிறது.

நாட்டின் ரிசர்வ் வங்கியின் அனைத்து வங்கிகளுக்கும் தலைமையகமாக இருந்துவருகிறது. அனைத்து பொது மற்றும் தனியார் வங்கிகள் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில்தான் இயங்கி வருகின்றது.

இந்த சூழ்நிலையில், ரிசர்வ் வங்கி இந்த வருடம் வங்கிகள் மற்றும் பண பரிவர்த்தனைகளில் ஒரு சில மாற்றங்களை கொண்டு வந்திருக்கிறது. அந்த விதத்தில் ஏடிஎம் இயந்திரங்களில் பண பரிவர்த்தனைகளுக்கு கூடுதல் கட்டணம் விதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

பொருட்கள் வாங்குவதற்காக வணிக வளாகங்களுக்கு செல்லும்போது வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கை சேமிக்கும் திட்டத்தை தடை செய்திருக்கிறது ரிசர்வ் வங்கி. வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கை பாதுகாக்கும் விதமாக பண இழப்பை தடுப்பதற்காகவும், இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்திருக்கிறது.

இதனைத்தொடர்ந்து தற்சமயம் கடன் திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் தொடர்பான அறிவிப்புகளும் வெளியாகியிருக்கிறது. வருடம்தோறும் ரிசர்வ் வங்கியில் பணம் கொள்கை குழு கூட்டம் நடைபெறும்.

அந்த வங்கியில் 2022-ம் ஆண்டுக்கான பணக்கொள்கை குழு கூட்டம் பிப்ரவரி மாதம் 8ம் தேதி நடந்தது. இதனை தொடர்ந்து முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. இதில் எல்லோரும் எதிர்பார்த்த ரெப்போ வட்டி விகிதம் தொடர்பான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

அதனடிப்படையில் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதத்தில் எந்தவிதமான மாற்றமும் செய்யப்படவில்லை என்று ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்திருக்கிறார்.

அத்துடன் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் மாற்றமில்லாமல் 4% ஆகவே தொடரும் எனவும், பணப்புழக்கத்தை தற்போதைய நிலையிலேயே தொடருமாறு ஏற்பாடு செய்யப்படும் என்றும், அவர் தெரிவித்திருக்கிறார்.

வீடு, வாகன கடன்களுக்கான வட்டி விகிதம் அதே நிலையில் தொடரும் வங்கி இருப்புகளுக்கு வழங்கப்படும் வட்டி 3.35 சதவீதத்தில் எந்தவிதமான மாற்றமும் செய்யப்படாது என்று தெரிவித்திருக்கிறார்.