பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படுவதில் திடீர் திருப்பம்..! வெளியான பரபரப்பு தகவல்!!

0
233

தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும் தேதியை தள்ளிவைக்க தமிழக அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்தது. மத்திய மற்றும் மாநில அரசுகள் ஊரடங்கில் அவ்வபோது சில தளர்வுகளை அறிவித்து வந்தது. அந்த வகையில் நவம்பர் 30 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய பொது முடக்கம் நீட்டிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. மேலும், பள்ளி, கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் அனைத்தும் வரும் 16ம் தேதி முதல் திறக்கப்படும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

இதையடுத்து பள்ளி, கல்லூரிகள் திறக்க இது சரியான தருணம் இல்லை என பல்வேறு கருத்துக்கள் எழுந்தன. இந்நிலையில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் தேதி தள்ளி வைக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும், கொரோனா பரவல், பருவமழையை கருத்தில் கொண்டு பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படுவதை தள்ளி வைக்க அரசு பரிசீலனை செய்து வருவதாகவும், இதுகுறித்து கல்வித்துறை உயர் அதிகாரிகளுடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று திடீரென ஆலோசனை நடத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Previous articleகோஷ்டி மோதலால் கடுப்பான திமுக தலைமை! எந்த மாவட்டத்தில் தெரியுமா!
Next articleபிரியாணியும் பூவும் வாங்கி வெச்சிருக்கேன் எப்போ வரட்டும்! காதலர்கள் ஒரே அறையில்! அப்புறம்?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here