திருமணமான பெண்ணை ஏமாற்றினால் குற்றமில்லை!! ஹைகோர்ட் அதிரடி உத்தரவு!!
சமீபகாலமாக பல வழக்குகளில் வழங்கப்படும் தீர்ப்புகள் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை உண்டாக்கி வருகிறது. அந்த வகையில் தற்பொழுது கர்நாடக உயர்நீதிமன்றம் ஆனது திருமணமான பெண்ணை ஏமாற்றுவது குற்றமில்லை எனக் கூறி தீர்ப்பு வழங்கியுள்ளது.
பெங்களூரை சேர்ந்த பிரஜித் என்பவர் திருமணமான பெண்ணுடன் நெருங்கி பழகி வந்துள்ளார். பல நாட்களாக வெளிநாட்டு வேலையை பிரஜீத் எதிர்பார்த்து வந்த நிலையில், இவர் எதிர்பார்த்தது போலவே திடீரென்று இவருக்கு வெளிநாட்டில் வேலை கிடைத்தது.
உடனடியாக வெளிநாட்டுக்கு செல்வதற்கான அனைத்து பணிகளையும் மேற்கொண்டார். இந்த நிலையில் திருமணமான பெண்ணுடன் இருந்த தொடர்பை சிறிது சிறிதாக துண்டிக்க ஆரம்பித்தார்.
இதனால் பாதிப்படைந்த அந்தப் பெண் காவல்துறையில் தன்னை பிரஜித் ஏமாற்றி விட்டதாக புகார் அளித்தார். மேற்கொண்டு காவல்துறை பிரஜித் மீது வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கானது நேற்று நீதிபதிகள் முன்னிலையில் அமர்வுக்கு வந்தது.
அதில் நீதிபதிகள் கூறியதாவது, வழக்கு தொடுத்த பெண்ணிற்கு திருமணம் ஆகி உள்ளது. அது மட்டும்மின்றி அவரது கணவருடன் தற்பொழுது வரை விவாகரத்தும் பெறவில்லை.
இவ்வாறு விவாகரத்து பெறாமல் தகாத முறையில் மற்றொரு நபருடன் தொடர்பு வைத்துக் கொண்டால் அது பெண்ணை ஏமாற்றும் செயல் என்று ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே பிரஜித் மீது போட்ட வழக்குகள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும் எனக்கூறி வழக்கை முடித்து வைத்தனர்.