ஆன்லைன் முதலீடு என லட்சம் கணக்கில் மோசடி – 2 பேர் கைது

Photo of author

By Anand

ஆன்லைன் முதலீடு என லட்சம் கணக்கில் மோசடி – 2 பேர் கைது

ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக பணம் சமபாதிக்கலாம் என ₹37 லட்சம் வரை மோசடி செய்த 2 பேர் தூத்துக்குடியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

தூத்துக்குடியில் பலரிடம் ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக பணம் சமபாதிக்கலாம் என்று கூறி ரூபாய் 37 லட்சம் பணம் மோசடி செய்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியை சேர்ந்த திலீபன்ராஜ் மனைவி ஐஸ்வர்யா என்பவரது வாட்ஸ்அப்பிற்கு வந்த லிங்க் மூலம் போலியான முதலீடு நிறுவனத்தின் செயலியை பதிவிறக்கம் செய்;து பணம் முதலீடு செய்துள்ளார். இதனையடுத்து தனது பணம் திரும்ப வராமல் மோசடி செய்யப்பட்டுள்ளதை அறிந்த ஐஸ்வர்யா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணனிடம் புகார் அளித்தார்.

 

இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சைபர் குற்ற பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் இளங்கோவன்-க்கு விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.

 

அவரது உத்தரவின்பேரில் சைபர் குற்ற பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் மேற்பார்வையில் சைபர் குற்ற பிரிவு காவல் ஆய்வாளர் சிவசங்கரன் தலைமையில் காவலர்கள் விசாரணை மேற்கொண்டதில், கேரளா பாலக்காடு கரியம்பழா பகுதியை சேர்ந்த முகம்முது குஞ்சிசாலி மகன் முகம்மது சாகிப் உசைன் (25) மற்றும் பாலக்காடு போம்பரா பகுதியை சேர்ந்த ஜார்ஜ் மகன் ஜேம்ஸ் ஜார்ஜ் (25) ஆகிய 2 பேரும் ஐஸ்வர்யாவிடம் போலியான முதலீடு நிறுவனத்தின் மூலம் ரூபாய் 24,42,186/- பணம் மோசடியில் ஈடுபட்டதும், மேலும் இவர்கள் இதுவரை தூத்துக்குடியில் 12 பேரிடம் சுமார் ரூபாய் 37 லட்சமும், முகம்மது சாகிப் உசைன் என்பவர் 10 நபர்களின் வங்கி கணக்கை பயன்படுத்தி ரூபாய் 3 கோடி வரை மோசடியில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்தது.

 

உடனே போலீசார் முகம்மது சாகிப் உசைன் மற்றும் ஜேம்ஸ் ஜார்ஜ் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.