காவல்துறையினருக்கு வைத்த செக்! உத்தரவை மீறினால் இனி கடும் நடவடிக்கை தான்!
அரசு ஊழியர்கள் பணி நேரத்தில் செல்போன் உபயோகிக்க கூடாது என்று உயர்நீதிமன்றம் சில நாட்களுக்கு முன்பு உத்தரவை பிறப்பித்தது. அரசு ஊழியரான ராதிகா என்பவர் தன்னுடன் பணிபுரியும் இதர ஊழியரை பணி நேரத்தில் தனது செல்போன் மூலம் வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோ ஆனது கிடு கிடுவென சமூக வலைத்தளத்தில் பரவியது. இவ்வாறு அரசு ஊழியர்கள் பணி நேரத்தில் செல்போன் உபயோகிப்பதை தடை செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் மனு அளித்தனர்.
அந்த மனுவை விசாரித்த நீதிபதி இனி அரசு ஊழியர்கள் யாரும் பணி நேரத்தில் செல்போன் உபயோகிக்க கூடாது என்று தெரிவித்தார். ஏதேனும் அவசர காரியங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டுமானால் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரியிடம் அனுமதி பெற்று செல்போன் உபயோகிக்கலாம் என்று கூறினார். அதேபோல ஒவ்வொரு அரசு அலுவலகத்திலும் தனியாக ஒரு செல்போன் வைக்குமாறும் தமிழக அரசை பரிந்துரை செய்தார். இவ்வாறு இருக்கையில் அரசு ஊழியர்களுக்கு அடுத்தபடியாக காவல்துறையினரும் தங்கள் பணி நேரத்தில் செல்போன் உபயோகிக்க கூடாது என்று காவல்துறை ஆணையர் சந்திப் ராய் ரத்தூர் தெரிவித்துள்ளார். பல காவல் அதிகாரிகள் தங்கள் பணி நேரத்தில் செல்போன் உபயோகித்து வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
குறிப்பாக டிராபிக் போலீஸ் ஆக இருப்பவர்கள் மதிய வேளையில் தங்களுக்கு கொடுக்கப்பட்ட இடத்தில் உட்கார்ந்து கொண்டு செல்போன் உபயோகித்து வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அதுமட்டுமின்றி இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக அளவு போக்குவரத்து விபத்துகள் நடப்பதாக தற்போதைய நடப்பு சதவீதம் கூறுகிறது. அரசு ஊழியர் என்பவர்கள் மக்களின் சேவைகளை பூர்த்தி செய்யவே இருக்க வேண்டும். அதை தவிர்த்து தங்களின் சொந்த காரியங்களுக்காக பணி நேரத்தை செலவிடக்கூடாது. இனிவரும் காலங்களில் காவல் அதிகாரிகள் யாரேனும் பணி நேரத்தில் செல்போன் உபயோகித்தால் கட்டாயம் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை ஆணையர் கூறியுள்ளார்.