உங்களுக்கு வறண்ட சருமமா? இதை செய்து பாருங்க! பெண்களுக்கு பயனுள்ள 5 இயற்கை அழகு குறிப்புகள்
மஞ்சள்:
தூய மஞ்சளை நன்கு அரைத்து, அதில் நீர் சிறிதளவு சேர்த்து பசை போல் செய்து, முகத்தில் தடவி 30 நிமிடங்களுக்கு பின் அது நன்றாக உலர்ந்த பிறகு நன்கு முகத்தை கழுவி விட்டால் முகத்திற்கு கூடுதல் பொலிவு கிடைக்கும்.
அரிசிமாவு மற்றும் தேன்:
அரிசி, வெள்ளரிச் சாறு மற்றும் மலைத் தேன் சேர்த்து நன்கு கலக்கி பசை போன்று தயாரித்து முகத்தில் தடவி சிறிது நேரம் உலர வைத்து பின்பு கழுவினால் வறண்ட சருமம் பொலிவு பெரும்.
மோர்
தயிரிலிருந்து கடைந்து எடுக்கப்பட்ட மோரை, முகத்தில் தடவி, சிறிது நேரம் உலர வைத்து, பின்பு நன்கு கழுவினால், முகப்பொலிவு கிடைக்கும்.
தக்காளி மற்றும் வெள்ளரிகாய்:
தக்காளி மற்றும் வெள்ளரி இரண்டையும் சேர்த்து நன்கு சாறாகப் பிழிந்து முகத்தில் தடவிவிட்டு 30 நிமிடம் உலர வைக்க வேண்டும். அதன் பிறகு கழுவினால் வறண்ட சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்கும். மற்றும் வெள்ளரிகாயை சிறிய துண்டுகளாக நறுக்கி முகத்தில் தடவி உலர வைத்தால் 20 முதல் 30 நிமிடங்களில் சருமம் பளபளப்பாக்கி விடும்.
வெண்ணெய்:
வெண்ணெய்யை அப்படியே முகத்தில் தடவி சிறிது நேரம் உலர வைத்து, பின்பு நீரில் கழுவினால், வறண்ட சருமம் நீங்கும்.