வங்கியில் பணம் செலுத்துவோரோ? எடுப்பவரோ? உடனே இதை பாருங்கள்!RBI வெளியிட்ட அறிவிப்பு!
இந்திய ரிசர்வ் வங்கி ஜூலை மாத வங்கி விடுமுறை நாட்கள் பட்டியலை வெளியிட்டிருந்தது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள பொது மற்றும் தனியார் துறை வங்கிகள் ,அவ்வங்கிகளின் விடுமுறை நாட்களின் பட்டியலை வங்கி தொடர்பான பணிகளை முன்னதாக சரிபார்த்துக் கொள்ளுமாறு இந்திய ரிசர்வ் வங்கி கேட்டுக் கொள்ளப்படுகிறது.
ஜூலை மாதத்தில் 12 நாட்கள் விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை நாட்கள் அந்தந்த மாநிலங்களை பொருத்த வகையில் வேறுபடுகின்றது. நாட்டில் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் இந்த விடுமுறை நாட்கள் பொருந்துவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், விடுமுறை குறிப்பிடப் பட்டுள்ள தினங்களில் பொதுத்துறை, தனியார் துறை, வெளிநாட்டு வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் பிராந்திய வங்கிகள் போன்ற அனைத்திற்கும் விடுமுறை அளிக்கப்படும். எனவே வாடிக்கையாளர்கள் வங்கி தொடர்பான பணிகளை திட்டமிடுவதற்கு முன்னர் விடுமுறை தினங்களை திட்டமிட்டுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.வரும் ஜூலை மாதத்தில் முக்கிய பண்டிகைகள் வர இருப்பதால், வங்கிகளுக்கு ஜூலை மாதத்தில் 12 நாட்கள் விடுமுறை என்று இந்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விடுமுறை நாட்களின் பட்டியலை இந்த பதிவில் காணலாம். மக்களின் வசதிக்காக ஜூலை மாத வங்கி விடுமுறை நாட்களை மேற்கண்ட அட்டவணையில் காணலாம்.
1 ஜூலை 2022 – வெள்ளிக்கிழமை-ரத யாத்திரை- ஒடிசா.
5 ஜூலை 2022 – செவ்வாய் – குரு ஹர்கோவிந்த் பிறந்தநாள் – ஜம்மு மற்றும் காஷ்மீர்.
6 ஜூலை 2022 – புதன் – MHIP நாள் – மிசோரம்.
7 ஜூலை 2022 -வியாழன்-கர்ச்சி பூஜை-திரிபுரா.
9 ஜூலை 2022 – சனிக்கிழமை-ஈத்-உல்-அதா-அனைத்து மாநிலங்களும்.
11 ஜூலை 2022 – திங்கள்-ஈத்-உல்-அசா-அனைத்து மாநிலங்களும்.
13 ஜூலை 2022 – புதன்-தியாகிகள் தினம்-ஜம்மு மற்றும் காஷ்மீர்.
13 ஜூலை 2022 – புதன்-பானு ஜெயந்தி-சிக்கிம்.
14 ஜூலை 2022 – வியாழன்-பென் டீன் கலாம்-மேகாலயா.
16 ஜூலை 2022 – சனிக்கிழமை-ஹரேலா-உத்தரகாண்ட்.
17 ஜூலை 2022 – ஞாயிறு-யு டிரோட் சிங் டே-மேகாலயா.
26 ஜூலை 2021 – செவ்வாய்-கேர் பூஜை-திரிபுரா.
31 ஜூலை 2022 – ஞாயிறு – ஹரியாலி தீஜ் – ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், பீகார் மற்றும் ஜார்கண்ட்.
31 ஜூலை 2022 – ஞாயிறு – ஷஹீத் உதம் சிங்கின் தியாக தினம் – பஞ்சாப் மற்றும் ஹரியானா. ஆகிய நாட்களில்இந்திய ரிசர்வ் வங்கி விடுமுறை நாட்கள் என அறிக்கையை வெளியிட்டுள்ளது.