காஜலின் குழந்தை பருவ புகைப்படத்தை பாருங்க!! வைரலாகும் புகைப்படம்!!

0
153
Check out Kajal's childhood photo !! Photo goes viral !!
Check out Kajal's childhood photo !! Photo goes viral !!

காஜலின் குழந்தை பருவ புகைப்படத்தை பாருங்க!! வைரலாகும் புகைப்படம்!!

தமிழில் முன்னணி நடிகையாக விளங்குபவர் காஜல் அகர்வால். இவர் ஒரு இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். ஹோ கயா நா ஹிந்தி திரைப்படம் மூலம் 2004 ஆம் ஆண்டு நடிகையாக அறிமுகமானார். பின்னர் 2007 ஆம் ஆண்டு லக்ஷ்மி கல்யாணம் என்ற திரைப்படத்தின் மூலமாக தெலுங்கு திரைப்படத்துறையில் அறிமுகமானார்.

அதன்பிறகு இவர் நடித்த பழனி என்ற திரைப்படம் தமிழில் வெளியானது. அதுவரை இவர் நடித்த திரைப்படங்கள் சரியாக ஓடாத நிலையில் 2009ஆம் ஆண்டு தமிழில் இவர் நடித்த மாவீரன் படம் பெரு மிகப்பெரிய வசூல் சாதனை புரிந்தது. இவருக்கு அத்திரைப் படத்திற்காக பிலிம்பேர் விருது பரிந்துரை செய்யப்பட்டது. அதன்பிறகு இவர் நடிப்பில் வெளிவந்த சில திரைப்படங்களும் வெற்றி பெற்றது. தற்போது இவர் தமிழ் தெலுங்கு மொழிகளில் முன்னணி நட்சத்திரமாக விளங்குகிறார்.

இவர் ஆரம்ப காலத்தில் கியூன்! ஹோ கயா நா திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராயின் தோழியாக நடித்த பாத்திரம் பெரிதாக பேசப்படவில்லை. அதன் பிறகு லக்ஷ்மி கல்யாணம் திரைப்படத்தின் மூலம் தெலுங்கு திரை துறையில் முக்கிய கதாபாத்திரமாக அறிமுகமானார். ஆனால் இதுவும் வெற்றி பெற தவறியது. மேலும் 2007ஆம் ஆண்டு இறுதியில் கிருஷ்ண வம்சி இயக்கத்தில் சந்தமாமா என்னும் திரைப்படத்தில் நடித்தார். இது அவருடைய வளர்ச்சிக்கு பெரிதும் உதவி புரிந்தது.

அதன்பிறகு தமிழ், தெலுங்கு, இந்தி என பல திரைப்படங்களில் நடித்து இருந்தார். இவர் தற்போது தொடர்ந்து தமிழ் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அண்மையில் வெளியான விவேகம் திரைப்படத்தில் தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித்குமாரின் மனைவியாக நடித்திருந்தார். அதை தொடர்ந்து மெர்சல் திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இது போன்று தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வரும் இவர் வலைதளங்களில் அவ்வப்போது தனது புகைப்படத்தை வெளியிட்டு வருவார். அந்த வகையில் தற்போது தனது குழந்தைப் பருவ புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை அவரது ரசிகர்கள் ரசித்து வருகின்றனர். அந்த புகைப்படம் இச்செய்தியில் இடையில் இணைக்கப்பட்டுள்ளது.

Previous articleதிமுக அமைச்சரின் மருமகள் சர்ச்சை பேச்சு! நடவடிக்கை எடுப்பாரா முதலமைச்சர்?
Next articleபங்கு சந்தை இன்று!! டெக் மஹிந்திரா லாபத்தில் முதலிடம் !! பஜாஜ் பின்சர்வ் 1.5%  வீழ்ச்சி!!