சென்னை – பெங்களூரு டபுள் டக்கர் ரயில் தடம் புரண்டது!! மீட்பு பணிகள் தீவிரம்!!
சென்னையிலிருந்து பெங்களூரு செல்லும் டபுள் டக்கர் ரயில் குப்பம் அருகே தடம் புரண்டது. நல்வாய்ப்பாக விபத்துக்கள் எதுவும் நிகழவில்லை. இதையடுத்து மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றது.
சென்னையிலிருந்து பெங்களூரு வரை செல்லும் டபுள்டக்கர் ரயில்(22625) இன்று காலை 7.25 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து கிளம்பியது. இதையடுத்து குப்பம் ரயில் நிலையத்தை கடந்து பங்காருப்பேட்டையை நோக்கி சென்று கொண்டிருந்த போது காலை 11.15 மணியளவில் ரயிலின் பெட்டிகள் தடம் புரண்டது. பெட்டிகள் தடம் புரண்டதை அடுத்து ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டது.
ரயில் பெட்டிகள் தடம் புரண்டதை அறிந்த தெற்கு ரயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். பெங்களூரு டபுள் டக்கர் ரயில் தடம் புரண்டதால் அந்த வழியாக செல்லும் இரயில்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.