அனைவரும் முக கவசம் அணிய வேண்டும்! சென்னை மாநகராட்சி மக்களுக்கு அன்பான வேண்டுகோள்!

Photo of author

By Sakthi

தமிழ்நாட்டில் வருகிற மே மாதம் மத்தியில் தான் இந்த நோய்த்தொற்று புதிய உச்சத்தில் இருக்கும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்திருக்கிறார்.
சென்னையில் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த சென்னை மாநகர ஆணையர் பிரகாஷ், இந்த நோய்த்தொற்று தொடர்பாக இலேசான அறிகுறி இருப்பவர்கள் வீட்டிலேயே தங்களை தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என தெரிவித்திருக்கிறார்.

ஏனெனில் தொற்று காரணமாக, மருத்துவமனையில் கூட்டம் அதிகரிக்கிறது. என்று தெரிவித்திருக்கிறார்.பாதிப்பைப் பொறுத்து டிஸ்சார்ஜ் செய்யப்படும் நாட்கள் மாற்றமடையலாம், ஒரு சிலர் நான்கு தினங்களில் டிஸ்சார்ஜ் செய்யப்படலாம். சிலருக்கு பத்து நாட்கள் ஆகலாம் ,சென்னையை பொறுத்தவரையில் நான்கு நாட்கள் முகக்கவசம் அணிந்தாலே தொற்று பாதிப்பு குறைந்துவிடும் என தெரிவித்திருக்கிறார்.

மே மாதம் மத்தியில் இந்த தொடரின் பாதிப்பு உச்சத்தில் இருக்கும் என்று தெரிவித்த அவர் மருத்துவ நிபுணர்கள் இவ்வாறு தெரிவித்திருக்கிறார்கள். அதன் காரணமாக, மக்கள் எல்லோரும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மிகுந்த கவனத்துடன் இருக்கவேண்டும் சென்னையில் பல இடங்களில் இந்த நோய் தொற்று சிகிச்சை மையங்கள் இருக்கின்றது அங்கே சென்று சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம் என்று தெரிவித்திருக்கிறார்0 இந்த நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்கு மாநகராட்சியின் சுகாதாரத்துறை ஒன்றிணைந்து பணியாற்றி வருகிறது என்று அவர் தெரிவித்திருக்கிறார்.