அம்மா உணவகங்கள் மூலமாக 13 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு இலவச உணவு சென்னை மாநகராட்சி தகவல்!

0
129

அம்மா உணவகங்கள் மூலமாக 13 லட்சத்து 68 ஆயிரத்து 385 நபர்களுக்கு இலவசமாக உணவு வழங்கப்பட்டிருப்பதாக சென்னை மாநகராட்சி சார்பாக தெரிவிக்கப்படுகிறது.

சென்னையில் சென்ற வாரம் பெய்த பலத்த மழையின் காரணமாக, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் விதத்தில் அம்மா உணவகங்களில் சென்ற பத்தாம் தேதி முதல் இலவசமாக உணவு வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

அதனடிப்படையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பத்தாம் தேதி முதல் கடந்த 14ஆம் தேதி வரையில் அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்கப்பட்டது. நேற்று முதல் அம்மா உணவகங்களில் மறுபடியும் உணவுக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக மாநகராட்சி உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது,

முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவின் அடிப்படையில், 5 நாட்களாக பொதுமக்களுக்கு அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு கொடுக்கப்பட்டு வந்தது. அதன் அடிப்படையில், கடந்த 10ஆம் தேதி 12 லட்சத்து 38,733 நபர்களுக்கும், 16ஆம் தேதி 2 லட்சத்து 65 ஆயிரத்து 47 நபர்களுக்கும், 12ஆம் தேதி இரண்டு லட்சத்து 86 ஆயிரத்து 462 நபர்களுக்கும், 13ஆம் தேதி 3 லட்சத்து ஆயிரத்து 130 நபர்களுக்கும், 15ஆம் தேதி 2 லட்சத்து  28 ஆயிரத்து 13 நடக்கும் என்று ஒட்டு மொத்தமாக 13 லட்சத்து 68 ஆயிரத்து 385 நபர்களுக்கு உணவுகள் வழங்கப்பட்டிருக்கின்றன.

சென்ற பத்தாம் தேதி முதல் 14ஆம் தேதி வரையில் காலை உணவாக 13 லட்சத்து 29 ஆயிரத்து 135 இட்லியும், ஒரு லட்சத்து 47 ஆயிரத்து 287 பொங்கலும், மதிய உணவாக ஒரு லட்சத்து 56 ஆயிரத்து 764 சாம்பார் சாதமும், 54 ஆயிரத்து 628 கறிவேப்பிலை சாதம், 85 ஆயிரத்து 111 லெமன் சாதம், 51 ஆயிரத்து 272 தயிர் சாதமும், இரவு நேரத்திற்கு 5 லட்சத்து 69 ஆயிரத்து 422 சப்பாத்தியும், வழங்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முதல் வழக்கம்போல உணவுக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகின்றது. இவ்வாறு அந்த மாநகராட்சி அதிகாரி கூறியிருக்கிறார்.

சென்னை மாநகராட்சி சார்பாக மழை நீர் தேங்கிய இடங்களில் இருக்கின்ற பொதுமக்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு மாநகராட்சியின் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இருக்கின்றன. அதோடு அவர்களுக்கு மூன்று வேளையும் தரமான உணவு வழங்கப்பட்டு வருகின்றது. நேற்றைய தினம் நிலவரத்தின் அடிப்படையில் நிவாரண முகாம்களில் 1530 நபர்கள் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இருக்கின்ற பொதுமக்கள் மற்றும் மழைநீர் தேங்கி பாதிக்கப்பட்ட இருக்கக் கூடிய இடங்களில் வசித்து வரும் பொதுமக்களுக்கு சென்ற 7ம் தேதி முதல் நேற்று வரை இரு பெருநகர சென்னை மாநகராட்சி சார்பாக 60 லட்சத்து 74 ஆயிரத்து 37 உணவு பொட்டலங்கள் வழங்கப் பட்டிருக்கின்றன.

Previous articleஅதைப் பற்றி எங்களுக்கு எந்த கவலையும் இல்லை! எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டம்!
Next articleதமிழகத்தில் தொடரும் கனமழை! 5667 குளங்கள் நிரம்பின!