சென்னை பெருநகர மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கோவாக்சின் தடுப்பூசி இரண்டாவது தவணை செலுத்திக்கொள்வதற்கு செய்யப்பட்ட சிறப்பு ஏற்பாடு மேலும் இரண்டு தினங்களுக்கு நீட்டிக்கப்பட்டு இருப்பதாக.மாநகராட்சியின் சார்பாக இரண்டாவது தவணை தடுப்பூசி போட்டுக்கொள்ள தவறியவர்களின் விபரங்கள் சேகரிக்கப்பட்டு மண்டல அலுவலகங்களில் இருந்து தொலைபேசி மூலமாக தகவல் தெரிவிக்கப்பட்டு உடனடியாக இரண்டாவது தவணை தடுப்பூசி திருத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.
அதோடு கோவாக்சின் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாத நபர்களுக்கு 23 மற்றும் 24 ஆகிய இரண்டு தினங்களில் மாநகராட்சியின் அனைத்து தடுப்பூசி மையங்களிலும் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ள சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு கடந்த இரண்டு தினங்களில் எட்டாயிரத்து 880 நபர்கள் கோவாக்ஸின் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தி பயன் அடைந்திருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.
தற்சமயம் சென்னை பெருநகர மாநகராட்சிக்கு உட்பட்ட சில பகுதிகளில் கோவாக்சின் தடுப்பூசி இரண்டாவது தவணை செலுத்தி கொள்ள செய்யப்பட்ட சிறப்பு ஏற்பாடு இன்னும் இரண்டு தினங்களுக்கு அதாவது இன்றும், நாளையும், நீட்டிக்கப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.ஆகவே கோவாக்சின் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி 28 நாட்களை கடந்தவர்கள் தங்களுடைய பகுதிகளுக்கு உட்பட்ட மாநகராட்சியின் தடுப்பூசி மையங்களுக்கு சென்று இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டு பயன்பெறுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது என்று ஒரு அறிவிப்பை சென்னை மாநகராட்சி வெளியிட்டிருக்கிறது.