இது உங்களுக்கே அநியாயமா இல்ல? சீனாவுக்கு நோபல் பரிசு வேண்டுமாம்!

0
198

கொரோனா வைரஸ் இன் ஆராய்ச்சியில் சிறப்பாக பங்களித்ததற்காக அதன் ஆய்வகத்திற்கு மதிப்புமிக்க நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று சீனா கோரிக்கை விடுத்துள்ளது.

அண்மையில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் சீனாவின் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ஜாவ் லீகியன் சீனாவின் வுஹான் ஆய்வகம் கொரோனா வைரஸை படிப்பதற்காக மருத்துவத்துக்கான நோபல் பரிசுக்கு தகுதியானது என்று கூறினார். மேலும் சீனாவில் சிறந்த அறிவியல் விருதுக்கு ஆய்வகம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சீனா அறிவியல் அகாடமி, கொரோனா வைரஸின் மரபணுவை அடையாளம் காண்பதில் தனது சிறந்த அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சிறப்பாக அதன் பங்கை வெளிப்படுத்தியதால் சிறந்த அறிவியல் மற்றும் தொழில்நுட்ப சாதனை 2021 என்ற பரிசுக்கு தேர்வாகியுள்ளது. என்று கூறியுள்ளார்.

2019 ஆம் ஆண்டில் கொரோனா வைரஸ் தோன்றியதிலிருந்து சீனாவின் இந்த ஆய்வகம் சர்ச்சையில் உள்ளது ஒன்றன்பின் ஒன்றாக கொரோனா வின் ஆதாரமாக இந்த வுஹான் ஆய்வகம் தான் சொல்லப்படுகிறது.சமீபத்தில் வவ்வால்களை வைத்து பரிசோதித்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளதை வைரலாஜிஸ்ட்கள் தப்பிப்பதற்காக உருவாக்கி வருகிறோம் என்று கூறுகின்றனர். ஆனால் இதுவரை அதனை ஆதரிக்கும் உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை.

வுஹான் ஆய்வகத்தில் இருந்து கொரோனா வைரஸ் பரவியது என்று கூறிய முதல் நபர் சீனா வைரஸ் டாக்டர் லீ யான் என்பவர் தான். சீனா நோபல் பரிசுக்கு கோரிக்கை விடுத்ததற்கு பதிலளித்த அவர், “சீனா ஆய்வகத்திற்கு சீனாவே நோபல் பரிசு கேட்பது பைத்தியமான ஒன்று. அதுமட்டுமின்றி கொரோனா தொற்று அந்த ஆய்வகத்தில் இருந்து தான் தோன்றியது என்பது மக்களுக்கு தெரியவந்தது. மேலும் கொரோனா வைரஸ் உருவாகி பரவியதற்கு இந்த ஆய்வகங்கள் மேலும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன, என்பதை மக்கள் உணர்ந்து வருகிறார்கள். இருப்பினும் இந்த நோபல் பரிசுக்கு சீனா அரசு கோரிக்கை விடுத்துள்ளது. எதிர்மாறானது மற்றும் பொருந்தாது என்று கூறியுள்ளார்.

நோபல் பரிசை கேட்பது சிசிபி ஆட்சியின் நோக்கங்களை உலகிற்கு காண்பது மட்டுமல்லாமல், அங்கு நிலவும் கம்யூனிச சித்தாந்தம் சர்வாதிகாரமும் எவ்வளவு மனிதாபிமானம் அற்றது என்பதை நிரூபிக்கிறது. மேலும் கொரோனா ஒரு ஆய்வக விபத்தினால் ஏற்படவில்லை. இது சீன அரசாங்கத்தால் மற்ற நாடுகளை அழிக்க வேண்டும் என்றே வெளியிடப் பட்டது என்பதை தெளிவாகக் கூறுகிறது, என்று அவர் கூறினார்.

Previous articleசென்னை மாநகராட்சி வெளியிட்ட சூப்பர் ஆஃபர்! பொதுமக்களே பயன்படுத்திக் கொள்ளுங்கள்!
Next articleதொடரும் பாலியல் தொல்லை! இன்ஸ்பெக்டர் கைது! தாயே உடந்தை!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here