மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த இட ஒதுக்கீடு வழக்கு! சென்னை உயர் நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!

Photo of author

By Sakthi

மருத்துவ படிப்பில் தேசிய அளவில் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கின்ற இடங்களுக்கு மற்ற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார்கள்.இந்த வழக்கை விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்றம் இட ஒதிக்கீடு கொடுப்பது குறித்து குழு ஒன்றை அமைத்திருக்கிறது.

இதன் அடிப்படையில் அமைக்கப்பட்ட குழு தமிழ்நாட்டில் மருத்துவ படிப்பில் 69 சதவீத இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்று பரிந்துரை செய்தது.இதற்கிடையே உச்ச நீதிமன்றத்தில் இருக்கின்ற ஒரு வழக்கை சுட்டிக்காட்டி தமிழ்நாட்டில் இந்த 69 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த இயலாது என்று மத்திய அரசு தெரிவித்ததாக திமுக ஒரு வழக்கை தொடர்ந்து இருந்தது.

இந்த வழக்கை விசாரணை செய்த சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் இருக்கின்ற வழக்கிற்கும் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு இருக்கும் எந்த விதமான சம்பந்தமும் கிடையாது 2020 மற்றும் 21 ஆம் கல்வி ஆண்டில் இட ஒதுக்கீட்டை இட ஒதுக்கீட்டை அமல்படுத்தப்படும் என்று மத்திய அரசு உறுதி அளித்த பின்னரும் கூட அதனை அமல்படுத்தவில்லை. இது நீதிமன்ற அவமதிப்பு என்று தெரிவித்து இருந்தார்.

அந்த சமயத்தில் மத்திய அரசு சார்பாக ஆஜரான வழக்கறிஞர் அளித்த மனு ஒன்றில் 50 சதவீத இட ஒதுக்கீடு கேட்டுப் பெற்று தற்சமயம் 69 சதவீத இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார்கள். இந்த இட ஒதுக்கீட்டை வழங்க மத்திய அரசு தயாராக இருக்கிறது. இதில் எந்த நீதிமன்ற அவமதிப்பும் இல்லை என்று தெரிவித்தார். அதோடு இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது இல்லை என மத்திய அரசு தரப்பில் வாதம் செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வேண்டும் என்று அறிவுரை வழங்கிய நீதிபதிகள் தமிழ்நாட்டில் பின்பற்றக்கூடிய 69 சதவீத இட ஒதுக்கீட்டை மத்திய அரசு 2021 மற்றும் 22 ஆம் கல்வியாண்டில் எவ்வாறு அமல்படுத்த இருக்கிறது. இந்த விவகாரத்தில் உங்களுடைய நிலைப்பாடு என்ன என்பது தொடர்பாக எதிர்வரும் வாரம் மத்திய அரசு சார்பாக விளக்கம் கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டு இந்த வழக்கை ஜூலை மாதம் 26-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து இருக்கிறார்கள்.