சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட உடுமலை சங்கரின் கொலை வழக்கில் அதிரடி தீர்ப்பை வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சாதி மறுப்பு காதல் திருமணம் செய்து கொண்டதால் படுகொலை செய்யப்பட்ட உடுமலை சங்கர் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 6 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கபட்டிருந்தது.
இந்நிலையில் இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் செய்யபட்டிருந்த மேல்முறையீட்டு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளிப்பதாக அறிவித்திருந்தது.
இதனையடுத்து இன்று வெளியான இந்த தீர்ப்பில் கௌசல்யாவின் தந்தை சின்னசாமிக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையிலிருந்து விடுதலை செய்யபடுவதாகவும், மற்ற 5 பேருக்கும் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மேலும் கௌசல்யாவின் தாய்க்கு வழங்கப்பட்ட விடுதலையை இந்த தீர்ப்பு உறுதி செய்துள்ளது